| 1 | ஓபதியா கண்ட காட்சி: தலைவராகிய ஆண்டவர் ஏதோமைக் குறித்து இவ்வாறு சொல்கின்றார்: “விழித்தெழுங்கள், ஏதோமுக்கு எதிராகப் போருக்குப் புறப்பட்டுச் செல்வோம்!” என்று அறிவிக்கத் தூதன் ஒருவனை வேற்றினத்தாரிடையே ஆண்டவர் அனுப்பினார், என்பதாக ஆண்டவரிடமிருந்து வந்த செய்தி ஒன்றை நாம் கேட்டிருக்கிறோம். | சங் 137:7 ஏசா 21:11 ஏசா 34:1-17 ஏசா 63:1-6 எரே 9:25 எரே 9:26 எரே 25:17 எரே 25:21 எரே 49:17-22 புலம் 4:21 புலம் 4:22 எசே 25:12-14 எசே 35:3-15 யோவே 3:19 ஆமோ 1:11 ஆமோ 1:12 மல்கி 1:3 மல்கி 1:4 |
| 2 | நான் உன்னை மக்களினத்தாரிடையே சிறுமைக்குள்ளாக்குவேன்: நீ பெரும் நிந்தைக்கு ஆளாக்கப்படுவாய். | எண் 24:18 1சாமு 2:7 1சாமு 2:8 யோபு 34:25-29 சங் 107:39 சங் 107:40 ஏசா 23:9 எசே 29:15 மீகா 7:10 லூக் 1:51 லூக் 1:52 |
| 3 | பாறை இடுக்குகளில் வாழ்பவனே! உயரத்திலே குடியிருப்பை அமைத்திருப்பவனே! “என்னைத் தரை மட்டும் தாழத்தக் கூடியவன் யார்?” என உள்ளத்தில் சொல்லிக் கொள்பவனே! உன் இதயத்தின் இறுமாப்பு உன்னை ஏமாற்றிவிட்டது. | நீதி 16:18 நீதி 18:12 நீதி 29:23 ஏசா 10:14-16 ஏசா 16:6 எரே 48:29 எரே 48:30 எரே 49:16 மல்கி 1:4 |
| 4 | நீ கழுகைப் போல் உயர உயரப் பறந்தாலும், விண்மீன்கள் நடுவில் உன் கூட்டை அமைத்தாலும், அங்கிருந்தும் உன்னைக் கீழே விழச் செய்வேன், என்கிறார் ஆண்டவர். | யோபு 20:6 யோபு 20:7 யோபு 39:27 யோபு 39:28 எரே 49:16 ஆபகூ 2:9 |
| 5 | உன்னிடம் திருடர்கள் வருவார்களாயின், கொள்ளைக்காரர்கள் இரவில் வருவார்களாயின் தங்கள் தேவைக்கு அதிகமாகத் திருடுவார்களோ? திராட்சைப் பழம் பறிக்கின்றவர்கள் உன்னிடம் வந்தால் திராட்சைப் பழங்களில் சிலவற்றையாவது விட்டுவைக்க மாட்டார்களா? நீயோவெனில் முற்றிலுமாய்ச் சூறையாடப்பட்டாய்! | எரே 49:9 |
| 6 | ஏசா எவ்வளவாய்க் கொள்ளையடிக்கப்பட்டான்! மறைத்து வைக்கப்பட்ட அவனுடைய கருவூலங்கள் சூறையாடப்பட்டன. | சங் 139:1 ஏசா 10:13 ஏசா 10:14 ஏசா 45:3 எரே 49:10 எரே 50:37 மத் 6:19 மத் 6:20 |
| 7 | உன்னோடு உடன்படிக்கை செய்தவர்கள் யாவரும் உன்னை ஏமாற்றி விட்டார்கள்: அவர்கள் உன்னை எல்லை வரை விரட்டி விட்டார்கள்: உன்னோடு உறவாடியவர்கள் உனக்கு எதிராய் எழும்பி உன்னை மேற்கொண்டார்கள்: உன்னோடு உண்டவர்களும் நல்லுறவு கொண்டிருந்தவர்களும் உனக்குக் கண்ணி வைத்தார்கள்: உன்னைக் குறித்து “அவனுக்கிருந்த அறிவுக்கூர்மை எங்கே?” என்றார்கள். | சங் 55:12 சங் 55:13 எரே 4:30 எரே 30:14 புலம் 1:19 எசே 23:22-25 வெளிப் 17:12-17 |
| 8 | அந்நாளில் நான் ஏதோமிலுள்ள ஞானிகளையும் ஏசாவின் மலைமேல் உள்ள அறிவாளிகளையும் அழிக்காமல் விடுவேனா? என்கிறார் ஆண்டவர். | யோபு 5:12-14 சங் 33:10 ஏசா 19:3 ஏசா 19:13 ஏசா 19:14 ஏசா 29:14 1கொரி 3:19 1கொரி 3:20 |
| 9 | தேமான்! வலிமைமிக்க உன் வீரர்கள் திகிலடைவார்கள்: ஆதலால் ஏசாவின் மலைமேல் உள்ள யாவரும், வெட்டி வீழ்த்தப்பட்டு மடிவார்கள். | சங் 76:5 சங் 76:6 ஏசா 19:16 ஏசா 19:17 எரே 49:22 எரே 50:36 எரே 50:37 ஆமோ 2:16 நாகூ 3:13 |
| 10 | உன் சகோதரன் யாக்கோபுக்கு எதிராக நீ செய்த கொடுமையை முன்னிட்டு, நீ வெட்கி நாணுவாய். நீ என்றுமே இல்லாது ஒழிந்து போவாய். | ஆதி 27:11 ஆதி 27:41 எண் 20:14-21 சங் 83:5-9 சங் 137:7 புலம் 4:21 எசே 25:12 எசே 35:5 எசே 35:6 எசே 35:12-15 ஆமோ 1:11 |
| 11 | அயல்நாட்டார் யாக்கோபின் செல்வத்தைக் கொள்ளையிட்ட அந்நாளில்- வெளிநாட்டார் அவன் வாயில்களுக்குள் புகுந்து எருசலேமுக்காகத் தங்களுக்குள் சீட்டுப்போட்ட அந்நாளில்- நீ விலகி நின்று அவர்களுள் ஒருவனாக இருந்தாயே! | 2இரா 24:10-16 2இரா 25:11 எரே 52:28-30 |
| 12 | நீ உன் சகோதரனுடைய நாளைக் கண்டு, அவனுடைய வேதனை நாளைக் கண்டு மகிழ்ச்சியடையாது இருந்திருக்க வேண்டும்: யூதாவின் மக்களைப் பார்த்து அவர்களின் அழிவு நாளில் களிப்படையாது இருந்திருக்க வேண்டும்: அவர்களின் துன்ப நாளில் இறுமாப்படையாது இருந்திருக்க வேண்டும்: | சங் 22:17 சங் 37:13 சங் 54:7 சங் 59:10 சங் 92:11 மீகா 4:11 மீகா 7:8-10 மத் 27:40-43 |
| 13 | என் மக்கள் துன்புற்ற நாளில், அவர்களுடைய வாயில்களுக்குள் நுழையாது இருந்திருக்க வேண்டும்: அவர்கள் கேடுற்ற நாளில், அவர்களின் அழிவைக் குறித்து மகிழ்ச்சியடையாது இருந்திருக்க வேண்டும். அவர்கள் அழிவுற்ற நாளில், அவர்களின் பொருள்களைக் கொள்ளையடிக்காது இருந்திருக்க வேண்டும். | 2சாமு 16:12 சங் 22:17 சகரி 1:15 |
| 14 | அவர்களுள் தப்பி ஓடியவர்களை வெட்டி வீழ்த்தும்படி வழிச் சந்துகளில் பதுங்கியிராது இருந்திருக்க வேண்டும்: அவர்கள் துயருற்ற நாளில், அவர்களில் எஞ்சியோரைக் காட்டிக்கொடுக்காது இருந்திருக்க வேண்டும். | ஆமோ 1:6 ஆமோ 1:9 |
| 15 | ஏனெனில், ஆண்டவரின் நாள் வேற்றினத்தார் எல்லார் மேலும் வரப்போகின்றது: நீ செய்ததுபோலவே உனக்கும் செய்யப்படும்: நீ செய்த வினைகள் உன் தலைமேலேயே விழும். | சங் 110:5 சங் 110:6 எரே 9:25 எரே 9:26 எரே 25:15-29 எரே 49:12 புலம் 4:21 புலம் 4:22 எசே 30:3 யோவே 3:11-14 மீகா 5:15 சகரி 14:14-18 |
| 16 | என் திரு மலையில், நீங்கள் என் தண்டனையாகிய பானத்தைக் குடித்தது போலவே வேற்றினத்தார் அனைவரும் குடிப்பார்கள். மேலும்குடிப்பார்ர்கள், குடித்துக் கொண்டே இருப்பார்கள்: குடித்து மயங்கிக்கிடப்பார்கள். | சங் 75:8 சங் 75:9 ஏசா 49:25 ஏசா 49:26 ஏசா 51:22 ஏசா 51:23 எரே 25:15 எரே 25:16 எரே 25:27-29 எரே 49:12 யோவே 3:17 1பேது 4:17 |
| 17 | ஆனால், தப்பிப் பிழைத்தோர் சீயோன் மலையில் இருப்பர்: சீயோன் மலையும் தூய்மையாய் இருக்கும்: யாக்கோபின் குடும்பத்தார் தங்கள் உரிமைச் சொத்தைத் திரும்பப் பெறுவர். | ஏசா 46:13 யோவே 2:32 |
| 18 | யாக்கோபின் குடும்பத்தார் நெருப்பாய் இருப்பர்: யோசேப்பின் குடும்பத்தார் தீப்பிழம்பாய் இருப்பர்: ஏசாவின் குடும்பத்தாரோ வைக்கோலாய் இருப்பர்: அவர்கள் இவர்களைத் தீக்கிரையாக்கி முற்றிலும் அழித்து விடுவார்கள்: ஏசாவின் குடும்பத்தாருள் எவருமே தப்பமாட்டார்: ஆண்டவரே இதைக் கூறினார். | ஏசா 10:17 ஏசா 31:9 மீகா 5:8 சகரி 12:6 |
| 19 | நெகேபில் இருப்பவர்கள் ஏசாவின் மலையைத் தமதாக்கிக் கொள்வார்கள். செபேலாவைச் சார்ந்தவர்கள் பெலிஸ்தியர் நாட்டை உரிமையாக்கிக் கொள்வார்கள். அவர்கள் எப்ராயிம், சமாரியா நாடுகளைத் தம் உடைமையாக்கிக் கொள்வார்கள்: பென்யமினோ கிலயாதைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்வான். | எண் 24:18 எண் 24:19 யோசு 15:21 எரே 32:44 ஆமோ 9:12 மல்கி 1:4 மல்கி 1:5 |
| 20 | இஸ்ரயேலிலிருந்து நாடுகடத்தப்பட்ட வீரர்கள் திரும்பி வந்து பெனீசியாவிலிருந்து சாரிபாத்து வரை உள்ள நாட்டை உரிமையாக்கிக் கொள்வீர்: எருசலேமிலிருந்து செபராதுக்கு நாடுகடத்தப்பட்டோர் நெகேபின் நகர்களைச் சொந்தமாக்கிக் கொள்வர். | எரே 3:18 எரே 33:26 எசே 34:12 எசே 34:13 ஓசி 1:10 ஓசி 1:11 ஆமோ 9:14 ஆமோ 9:15 சகரி 10:6-10 |
| 21 | விடுதலை பெற்றோர் ஏசாவின் மலையை ஆளுவதற்குச் சீயோன் மலைமேல் ஏறுவர்: அரசாட்சி ஆண்டவருக்கே உரித்தாகும். | நியா 2:16 நியா 3:9 2இரா 13:5 ஏசா 19:20 தானி 12:3 யோவே 2:32 மீகா 5:4-9 சகரி 9:11-17 சகரி 10:5-12 1தீமோ 4:16 யாக் 5:20 |