மீகா 5:4-9 - WCV
4
அவர் வரும்போது, ஆண்டவரின் வலிமையோடும் தம் கடவுளாகிய ஆண்டவரது பெயரின் மாட்சியோடும் விளங்கித் தம் மந்தையை மேய்ப்பார்: அவர்களும் அச்சமின்றி வாழ்வார்கள்: ஏனெனில், உலகின் இறுதி எல்லைகள்வரை அப்போது அவர் மேன்மை பொருந்தியவராய் விளங்குவார்:
5
அவரே அமைதியை அருள்வார். அசீரியர் நம் நாட்டிற்குள் படையெடுத்து வரும்போதும், நம் அரண்களை அழித்தொழிக்கும்போதும் அவர்களுக்கு எதிராக மேய்ப்பர் எழுவரையும் மக்கள் தலைவர் எண்மரையும் நாம் கிளர்ந்தெழச் செய்வோம்.
6
அவர்கள் அசீரியா நாடு முழுவதையும் நிம்ரோது நாட்டை அதன் நுழைவாயில்கள் வரையிலும் தங்கள் வாளுக்கு இரையாக்குவார்கள்: அசீரியர் நம் நாட்டிற்குள் படையெடுத்து வரும் போதும், நம் எல்லைகளைக் கடந்து வரும்போதும், நம்மை அவர்களிடமிருந்து விடுவிப்பார்கள்.
7
அப்போது யாக்கோபில் எஞ்சியிருப்போர் ஆண்டவரிடமிருந்து வரும் பனியைப் போலவும் மனிதருக்காக காத்திராமலும் மானிடர்க்காகத் தாமதிக்காமலும், புல்மேல் பெய்கின்ற மழைத்துளிகள் போலவும், பல மக்களினங்களிடையே இருப்பார்கள்.
8
மேலும், யாக்கோபிலே எஞ்சியிருப்போர் காட்டு விலங்குகளிடையே இருக்கும் சிங்கம் போலவும், ஆட்டு மந்தைக்குள் நுழைந்து யாரும் விடுவிக்க இயலாத நிலையில் அவற்றை மிதித்துத் துண்டு துண்டாய்க் கிழித்துப் போடும் சிங்கக் குட்டி போலவும், பல மக்களினங்களிடையே இருப்பார்கள்.
9
உனது கை உன்னுடைய பகைவர்களுக்கு மேலாக உயர்த்தப்படும்: உன்னுடைய எதிரிகள் அனைவரும் அழிந்தொழிவார்கள்.