2சாமுவேல் 13:28-31 - WCV
28
அப்சலோம் தம் பணியாளரிடம்,”அம்னோனின் மனம் மதுவால் மயங்கும் நேரம் பாருங்கள்: அம்னோனைத் தாக்குங்கள்” என்று நான் உங்களிடம் கூறும் போது, அவனைக் கொன்றுவிடுங்கள். அஞ்சவேண்டாம். உங்களுக்குக் கட்டளையிடுபவன் நான் அல்லவா? உறுதிபூண்டு வீரர் புதல்வர்களாகச் செயல்படுங்கள்” என்று கூறினான்.
29
அப்சலோமின் பணியாளன் அவன் கட்டளையிட்டவாறே அம்மோனுக்குச் செய்தார்கள். இளவரசர் அனைவரும் அவரவர் தம் கழுதைகளில் ஏறித் தப்பி ஓடினார்.
30
அவர்கள் திரும்பிச் செல்கையில் அப்சலோம் இளவரசர் அனைவரையும் கொன்றதாகவும் அவருக்குள் ஒருவரும் தப்பவில்லை என்றும் தாவீதுக்குச் செய்து கிடைத்தது.
31
அரசர் எழுந்து தம் ஆடைகளை கிழித்து கொண்டு தரையில் படுத்தார். அங்கே நின்று கொண்டிருந்த பணியாளர் அனைவரும் தங்கள் ஆடைகளைக் கிழித்துக் கொண்டனர்.