எண்ணாகமம் 28:11-15 - WCV
11
மாதத் தொடக்கத்தில் எரிபலியாக நீங்கள் ஆண்டவருக்குச் செலுத்த வேண்டியவை: இளங்காளைகள் இரண்டு: ஆட்டுக் கிடாய் ஒன்று: ஒரு வயதுடைய ஆட்டுக்குட்டிகள் ஏழு: இவை பழுதற்றவையாக இருக்க வேண்டும்.
12
அவற்றுடன், உணவுப் படையலுக்காகக் காளை ஒவ்வொன்றுக்கும் எண்ணெயில் பிசைந்த இருபதுபடி மரக்காலில் மூன்று அளவு மெல்லிய மாவு: உணவுப் படையலுக்காக ஆட்டுக் கிடாய் ஒன்றுக்கு எண்ணெயில் பிசைந்த பத்தில் இருபங்கு மெல்லிய மாவு:
13
இவை எரிபலிக்காகவும் ஆண்டவருக்கு உகந்த நறுமணமான நெருப்புப் பலிக்காகவும் இருக்க வேண்டியவை.
14
அவற்றின் நீர்மப் படையல்களுக்கான திராட்சை இரசம் காளை ஒன்றுக்கு அரை கலயம், ஆட்டுக்கிடாய் ஒன்றுக்கு மூன்றிலொரு கலயம், ஆட்டுக்குட்டி ஒன்றுக்கு கால் கலயம் என்ற அளவில் இருக்க வேண்டும்.இது ஆண்டில் எல்லா மாதங்களிலும் ஒவ்வொரு மாதத்திற்கும் உரிய எரி பலி.
15
எந்நாளும் செலுத்தப்படும் எரிபலியும், நீர்மப் படையலும் நீங்கலாகப் பாவம் போக்கும் பலியாக ஆண்டவருக்கு ஒரு வெள்ளாட்டுக் கிடாய் செலுத்த வேண்டும்.