ஆபகூக் 3:5-8 - WCV
5
அவருக்கு முன்பாகப் பெருவாரி நோய் செல்கின்றது: அவருடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து கொள்ளைநோய் புறப்படுகின்றது.
6
அவர் நின்றால், நிலம் அதிர்கின்றது, அவர் நோக்கினால் வேற்றினத்தார் நடுங்குகின்றனர்: தொன்றுதொட்டு இருக்கும் மலைகள் பிளவுண்டு போகின்றன. பண்டைக் காலக் குன்றுகள் அமிழ்ந்து விடுகின்றன. அவர்தம் வழிகளோ என்றும் உள்ளவை.
7
கூசாவின் கூடாரங்களில் வேதனை நிறைந்திருப்பதை நான் கண்டேன்: மிதியான நாட்டுக் கூடாரத்திரைகள் நடுநடுங்கின.
8
ஆண்டவரே, நீர் உம்முடைய குதிரைகள் மேலும், வெற்றித் தேர்மேலும் ஏறிவரும் போது, நீரோடைகள்மீதா உம் கோபத்தீ மூண்டது? ஆறுகள்மீதா உம் சினம் பெருகியது? கடல்மீதா உம் சீற்றம் மிகுந்தது?