ஏசாயா 41:17-20 - WCV
17
ஏழைகளும் வறியோரும் நீரைத் தேடுகின்றனர்: அது கிடைக்கவில்லை. அவர்கள் தாகத்தால் நாவறண்டு போகின்றனர்: ஆண்டவராகிய நான் அவர்களுக்குப் பதிலளிப்பேன்: இஸ்ரயேலின் கடவுளாகிய நான் அவர்களைக் கைவிடமாட்டேன்.
18
பொட்டல் மேடுகளைப் பிளந்து ஆறுகள் தோன்றச் செய்வேன்: பள்ளத்தாக்குகளில் நீரூற்றுகள் புறப்படச் செய்வேன்: பாலைநிலத்தை நீர்த் தடாகங்களாகவும் வறண்ட நிலத்தை நீர்ச் சுனைகளாகவும் மாற்றுவேன்.
19
பாலைநிலத்தில் கேதுரு மரங்களை வளரச் செய்வேன்: சித்திம் மரம், மிருதுச் செடி, ஒலிவ மரம் ஆகியன தோன்றச் செய்வேன்: பாழ்நிலத்தில் தேவதாரு மரங்களையும், புன்னை மரங்களையும், ஊசியிலை மரங்களையும் வைப்பேன்.
20
அப்போது, ஆண்டவர் தம் ஆற்றலால் இதைச்செய்தார் என்றும் இஸ்ரயேலின்”தூயவர் அதைப் படைத்தார் என்றும் மக்கள் கண்டு உணர்ந்து கொள்வர்: ஒருங்கே சிந்தித்துப் புரிந்து கொள்வர்.