1
லெபனோனே! உன் வாயில்களைத் திறந்துவை: நெருப்பு உன் கேதுரு மரங்களைச் சுட்டெரிக்கட்டும்.
2
தேவதாரு மரங்களே! புலம்பியழுங்கள்: ஏனெனில், கேதுரு மரங்கள் வீழ்த்தப்பட்டன: ஓங்கி வளர்ந்த மரங்கள் பாழாயின: பாசான் நாட்டுக் கருவாலி மரங்களே! புலம்பியெழுங்கள்: ஏனெனில், அடர்ந்த காடு வெட்டி வீழ்த்தப்பட்டது.
3
அவர்கள் அலறியழும் குரல் கேட்கின்றது: ஏனெனில் அவர்களின் மேன்மை பாழ்படுத்தப்பட்டது: இளம் சிங்கங்களின் கர்ச்சனை கேட்கின்றது: ஏனெனில், யோர்தானின் காடு அழிக்கப்பட்டது.