ரோமர் 9:31-33 - WCV
31
ஆனால், கடவுளுக்கு ஏற்புடையவர்களாகுமாறு இஸ்ரயேல் மக்கள் திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்க முயற்சி செய்த போதிலும் அவர்கள் வெற்றி பெறவில்லை.
32
இதன் காரணம் என்ன? அவர்கள் நம்பிக்கையை அடிப்படையாகக் கொள்ளாமல் செயல்களின் அடிப்படையில் முயற்சி செய்தார்கள். எனவே “தடைக்கல்லின் மேல்” தடுக்கி விழுந்தனர்.
33
இதைப்பற்றியே, “இதோ தடுக்கி விழச்செய்யும் கற்பாறையையும் இடறச்செய்யும் கல்லையும் சீயோனில் வைக்கிறேன். அதன்மேல் நம்பிக்கை கொண்டோர் வெட்கத்திற்குள்ளாக மாட்டார்” என்று மறைநூலில் எழுதியுள்ளது.