மத்தேயு 24:23-26 - WCV
23
அப்பொழுது யாராவது உங்களிடம், “இதோ, மெசியா இங்கே இருக்கிறார்! அதோ, அங்கே இருக்கிறார் “ எனச் சொன்னால் நீங்கள் நம்ப வேண்டாம்.
24
ஏனெனில் போலி மெசியாக்களும், போலி இறைவாக்கினர்களும் தோன்றி, முடியுமானால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்களையே நெறி தவறச் செய்ய பெரும் அடையாளங்களையும் அருஞ் செயல்களையும் செய்வார்கள்.
25
இதை முன்னதாகவே நான் உங்களுக்குச் சொல்லி விட்டேன்.
26
ஆகையால் எவராவது உங்களிடம் வந்து, “அதோ, பாலைநிலத்தில் இருக்கிறார் “ என்றால் அங்கே போகாதீர்கள்: “இதோ, உள்ளறையில் இருக்கிறார் “ என்றால் நம்பாதீர்கள்.