| 1 | ஆண்டவர் கூறுவது இதுவே: “மோவாபு எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை மாற்றவே மாட்டேன்: ஏனெனில், அவன் ஏதோம் அரசனின் எலும்புகளைச் சுட்டுச் சாம்பலாக்கினான். | ஆமோ 2:4 ஆமோ 2:6 ஆமோ 1:3 ஆமோ 1:6 ஆமோ 1:9 ஆமோ 1:11 ஆமோ 1:13 எண் 22:1-25 உபா 23:4 உபா 23:5 சங் 83:4-7 மீகா 6:5 |
| 2 | ஆதலால், மோவாபின்மேல் நெருப்பைக் கொட்டுவேன். அது கெரியோத்தின் கோட்டைகளை விழுங்கிவிடும்: இரைச்சல், கூச்சல், எக்காள முழக்கம் ஆகியவை ஒருசேர எழும் வேளைகளில் மோவாபு மடிந்திடுவான். | எரே 48:24 எரே 48:41 |
| 3 | அந்நாட்டின் ஆட்சியாளனை அவர்களிடையேயிருந்து அகற்றிவிடுவேன்: அவனோடு அதிகாரிகள் அனைவரையும் அழித்து விடுவேன்” என்கிறார் ஆண்டவர். | எண் 24:17 எரே 48:7 எரே 48:25 |
| 4 | ஆண்டவர் கூறுவது இதுவே: “யூதா எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை மாற்றவேமாட்டேன்: ஏனெனில், அவர்கள் ஆண்டவரின் திருச்சட்டத்தை புறக்கணித்தார்கள்: அவருடைய நியமங்களை கடைப்பிடிக்கவில்லை: அவர்களுடைய தந்தையர் பின்பற்றிய பொய்த் தெய்வங்கள் அவர்களையும் வஞ்சித்துவிட்டன. | உபா 31:16-18 உபா 32:15-27 |
| 5 | ஆதலால் யூதாவின்மேல் நெருப்பைக் கொட்டுவேன்: அது எருசலேமின் கோட்டைகளை விழுங்கிவிடும்.” | எரே 17:27 எரே 21:10 எரே 37:8-10 எரே 39:8 எரே 52:13 ஓசி 8:14 |
| 6 | ஆண்டவர் கூறுவது இதுவே: “இஸ்ரயேல் எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை மாற்றவே மாட்டேன்: ஏனெனில், அவர்கள் நேர்மையாளரை வெள்ளிக் காசுக்கும் வறியவரை இரு காலணிக்கும் விற்கின்றார்கள். | ஆமோ 6:3-7 2இரா 17:7-18 2இரா 18:12 எசே 23:5-9 ஓசி 4:1 ஓசி 4:2 ஓசி 4:11-14 ஓசி 7:7-10 ஓசி 8:4-6 ஓசி 13:2 ஓசி 13:3 மீகா 6:10-16 |
| 7 | ஏழைகளின் தலைகளை மண்ணில் புழுதிபட மிதிக்கின்றார்கள்: ஒடுக்கப்பட்டோரின் நெறியைக் கெடுக்கின்றார்கள்: மகனும் தந்தையும் ஒரே பெண்ணைக் கூடி, என் திருப்பெயரைக் களங்கப்படுத்துகின்றார்கள். | ஆமோ 4:1 1இரா 21:4 நீதி 28:21 மீகா 2:2 மீகா 2:9 மீகா 7:2 மீகா 7:3 செப் 3:3 |
| 8 | கடன்காரரிடமிருந்து பறித்த ஆடைகளை விரித்துப் போட்டு, எல்லாப் பலிபீடங்களின் முன்பும் கிடந்து கொண்டு அபராதம் விதித்துக் கிடைத்த மதுவினைத் தங்கள் கடவுளின் இல்லத்தில் குடிக்கின்றார்கள். | யாத் 22:26 யாத் 22:27 உபா 24:12-17 எசே 18:7 எசே 18:12 |
| 9 | நானோ கேதுரு மரத்தின் உயரமும் கருவாலி மரத்தின் வலிமையும் கொண்ட எமோரியரை அவர்கள் முன்பாக அழித்துவிட்டேன்: மேலே அவர்களுடைய கனிகளையும், கீழே அவர்களுடைய வேர்களையும் அழித்துவிட்டேன்: | ஆதி 15:16 யாத் 3:8 யாத் 34:11 எண் 21:24 உபா 2:24-33 யோசு 3:10 யோசு 24:8-12 நியா 11:21-23 நெகே 9:22-24 சங் 135:10-12 சங் 136:17-22 |
| 10 | மேலும், எகிப்து நாட்டிலிருந்து உங்களை அழைத்து வந்து, நாற்பது ஆண்டுகள் பாலைநிலத்தில் உங்களை வழிநடத்தி, எமோரியர் நாட்டை நீங்கள் உரிமைச் சொத்தாக்கிக் கொள்ளச் செய்தேன். | யாத் 12:51 நெகே 9:8-12 சங் 105:42 சங் 105:43 சங் 136:10 சங் 136:11 எரே 32:20 எரே 32:21 எசே 20:10 மீகா 6:4 |
| 11 | உங்கள் புதல்வர்களுள் சிலரை இறைவாக்கினராய் உயர்த்தினேன்: உங்கள் இளைஞர்களுள் சிலரை நாசீர்களாய்த் தேர்ந்துகொண்டேன்: இஸ்ரயேல் மக்களே, இது உண்மையன்றோ?” என்கிறார் ஆண்டவர். | 1சாமு 3:20 1சாமு 19:20 1இரா 17:1 1இரா 18:4 1இரா 19:16 1இரா 20:13 1இரா 20:35 1இரா 20:41 1இரா 22:8 2இரா 2:2-5 2இரா 6:1 2இரா 17:13 2நாளா 36:15 2பேது 1:20 2பேது 1:21 |
| 12 | ஆனால், நீங்கள் நாசீர்களை மது அருந்தச் செய்தீர்கள்: இறைவாக்கினருக்கு “இறைவாக்கு உரைக்கக்கூடாது” என்று கட்டளையிட்டீர்கள். |
| 13 | வைக்கோல் பொதி நிறைந்த வண்டி அழுந்துவது போல, உங்களையும் நீங்கள் இருக்கும் இடத்திலேயே அழுத்துவேன். | சங் 78:40 ஏசா 1:14 ஏசா 7:13 ஏசா 43:24 எசே 6:9 எசே 16:43 மல்கி 2:17 |
| 14 | விரைந்தோடுகிறவனும் தப்ப முடியாது: வலிமையுள்ளவனும் தன் வலிமையை இழந்து விடுவான்: வீரனாலும் தன்னுயிரைக் காத்துக் கொள்ள முடியாது. | ஆமோ 9:1-3 யோபு 11:20 பிரச 9:11 ஏசா 30:16 எரே 9:23 |
| 15 | வில்லேந்தும் வீரன் எதிர்த்து நிற்கமாட்டான். விரைந்தோடுபவனும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளமாட்டான், குதிரை வீரனாலும் தன்னுயிரைக் காத்துக்கொள்ள முடியாது. | சங் 33:16 சங் 33:17 |
| 16 | அந்நாளில் வலிமை மிக்கவர்களுள் நெஞ்சுரம் கொண்டவன்கூடப் படைக்கலன்களைத் தூக்கி எறிந்து விட்டு ஓடுவான் என்கிறார் ஆண்டவர். | எரே 48:41 |