நியாயாதிபதிகள் 11:21-23 - WCV
21
இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர், சீகோனையும் அவன் மக்கள் அனைவரையும் இஸ்ரயேலரின் கையில் ஒப்புவித்தார்.இஸ்ரயேலர் எமோரியரை வென்று அவர்கள் வாழ்ந்த அந்த நாட்டை உரிமையாக்கிக் கொண்டனர்.
22
அர்னோனிலிருந்து யாபோக்குவரை, பாலை நிலத்திலிருந்து யோர்தான்வரை, இருந்த எமோரியரின் நாடு முழுவதையும் இஸ்ரயேலர் உரிமையாக்கிக் கொண்டனர்.
23
இப்பொழுது இஸ்ரயேலரின் கடவுளாகிய ஆண்டவர் எமோரியரைத் தம் மக்கள் இஸ்ரயேலின் முன்னிலையிலிருந்து துரத்தியிருக்க, அந்த நாட்டை உரிமையாக்கிக் கொள்வது எப்படி?