உபாகமம் 31:16-18 - WCV
16
அப்பொழுது ஆண்டவர் மோசேயிடம் கூறியது:”நீ உன் மூதாதையரோடு துஞ்சப்போகிறாய்.இந்த மக்களோ தாங்கள் போகவிருக்கும் நாட்டில் கிளர்ந்தெழுந்து வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றிக் கள்ள உறவு கொள்வர்.அவர்கள் என்னைவிட்டு விலகி, நான் அவர்களோடு செய்து கொண்ட உடன்படிக்கையை மீறுவர்.
17
அப்போது, எனது சினம் அந்நாளில் அவர்களுக்கு எதிராகக் கனன்றெரியும்.நான் அவர்களைக் கைவிடுவேன்.அவர்களிடமிருந்து என் முகத்தை மறைத்துக் கொள்வேன்.அவர்கள் அறியும்படி பல தீங்குகளும், இன்னல்களும் அவர்கள் மேல் வரும்.அந்நாளில் அவர்கள்”நம் கடவுள் நம்மோடு இல்லாததால் அன்றோ இத்தகைய தீங்குகள் நமக்கு வந்துள்ளன” என்பர்.
18
அவர்கள் வேற்றுத் தெய்வங்களை அணுகி, செய்த தீய செயல்கள் அனைத்தின் பொருட்டும், அந்நாளில் நான் என்முகத்தை மறைத்துக் கொள்வேன்.