ஆமோஸ் 9:1-3 - WCV
1
பலிபீடத்தருகில் ஆண்டவர் நிற்பதைக் கண்டேன். அவர் சொன்னார்: தூணின் முகட்டை இடித்துப் போடு: மேல்தளம் ஆட்டம் கொடுக்கட்டும்: மக்கள் அனைவருடைய தலையிலும் அதை உடைத்துத் தள்ளு: அவர்களுள் எஞ்சியிருப்போரை நான் வாளால் கொன்றுபோடுவேன்: அவர்களில் எவரும் ஓடிப்போக மாட்டார்: ஒருவர் கூட தப்பிப் பிழைக்கவும் மாட்டார்.
2
பாதாளம் வரையில் அவர்கள் இறங்கினாலும் அங்கிருந்தும் என் கை அவர்களை இழுத்து வரும்: வான் மட்டும் அவர்கள் ஏறிப்போனாலும், அங்கிருந்தும் நான் அவர்களைப் பிடித்து வருவேன்:
3
கர்மேல் மலையுச்சியில் ஓடி ஒளிந்துகொண்டாலும், அவர்களைத் தேடிப் பிடித்து அங்கிருந்து கொண்டு வருவேன்: என் கண்களுக்குத் தப்பி ஆழ்கடலில் மறைந்தாலும், அங்கு அவர்களைக் கடிக்கும்படி பாம்புக்குக் கட்டளையிடுவேன்.