ஆண்டவர் கூறுவது இதுவே: “யூதா எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை மாற்றவேமாட்டேன்: ஏனெனில், அவர்கள் ஆண்டவரின் திருச்சட்டத்தை புறக்கணித்தார்கள்: அவருடைய நியமங்களை கடைப்பிடிக்கவில்லை: அவர்களுடைய தந்தையர் பின்பற்றிய பொய்த் தெய்வங்கள் அவர்களையும் வஞ்சித்துவிட்டன.