உபாகமம் 24:12-17 - WCV
12
அவர் வறியவராயின், நீ அந்த அடகை வைத்துக்கொண்டு தூங்கச் செல்லாதே.
13
மாறாக, கதிரவன் மறைவதற்குள் அந்த அடகை அவரிடம் நீ திருப்பிக்கொடுத்தாக வேண்டும்.அதனால், அவர் தம் மேலாடையை விரித்துப் படுக்கும்போது உனக்கு ஆசி வழங்குவார்.உன் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் நீ ஏற்புடையவன் ஆவாய்.
14
வறியவரும் எளியவருமான கூலியாள்கள், உன் இனத்தாராயினும் சரி அல்லது உன்நாட்டில் உன் நகர்வாயிலுக்குள் உள்ள அன்னியராயினும் சரி, அவரைக் கொடுமைப்படுத்தாதே.
15
அவரது கூலியை அந்தந்த நாளில் கொடுத்துவிடு.கதிரவன் மறையுமுன்னே கொடு.ஏனெனில் அவர் வறியவராய் இருப்பதால், அவரது பிழைப்பு அதில் அடங்கியுள்ளது.இல்லையெனில், உனக்கெதிராக ஆண்டவரை நோக்கி முறையிடுவார்.அப்போது அது உனக்குப் பாவமாகும்.
16
பிள்ளைகளுக்காகத் தந்தையரும், தந்தையருக்காகப் பிள்ளைகளும் கொல்லப்பட வேண்டாம்.அவரவர் தம் பாவத்திற்காகக் கொல்லப்படட்டும்.
17
அன்னியர் அல்லது அனாதைக்கு உரிய நீதியைப் புரட்டாதே.கைம்பெண்ணின் ஆடையை அடகாக வாங்காதே.