மீகா 6:10-16 - WCV
10
“கொடியோரின் வீட்டில் தீய வழியால் சேர்க்கப்பட்ட களஞ்சியங்களையும் சபிக்கப்பட்ட மரக்காலையும் நான் மறப்பேனோ?
11
கள்ளத் தராசையும் கள்ள எடைக் கற்களையும் கொண்ட பையை வைத்திருப்போரை நேர்மையாளர் எனக் கொள்வேனோ?
12
உங்களிடையே உள்ள செல்வர்கள் கொடுமை நிறைந்தவர்கள்: அங்கே குடியிருப்பவர்கள் பொய்யர்கள்: அவர்கள் வாயிலிருந்து வஞ்சனையான பேச்சே வெளிப்படுத்துகின்றது.
13
ஆதலால், நான் உங்களை உங்கள் பாவங்களுக்காகத் தண்டிக்கத் தொடங்கியுள்ளேன்: நீங்கள் பாழாய்ப் போவீர்கள்.
14
நீங்கள் உணவருந்தினாலும் நிறைவடைய மாட்டீர்கள்: பசி உங்கள் வயிற்றைக் கிள்ளிக்கொண்டிருக்கும்: நீங்கள் எதையும் பாதுகாப்பாக வைத்திருக்கமாட்டீர்கள், இழப்பீர்கள்: அப்படியே நீங்கள் எதையாவது பாதுகாப்பாக வைத்தாலும் அதை நான் வாளுக்கு இரையாக்குவேன்.
15
நீங்கள் விதைப்பீர்கள்: ஆனால், அறுவடை செய்யமாட்டீர்கள்: ஒலிவக் கொட்டைகளை ஆலைக்குள் இட்டு ஆட்டுவீர்கள், ஆனால், உங்களுக்கு எண்ணெய் தடவிக்கொள்ளமாட்டீர்கள்: திராட்சைப் பழம் பிழிவீர்கள்: ஆனால், திராட்சை இரசத்தைச் சுவைக்கமாட்டீர்கள்.
16
ஏனெனில், நீங்கள் ஒம்ரியின் கட்டளைகளைக் கடைப்பிடித்தீர்கள்: ஆகாசு குடும்பத்தாரின் செயல்கள் அனைத்தையும் பின்பற்றினீர்கள், அவர்களின் திட்டங்களைப் பின்பற்றி நடந்தீர்கள்: ஆதலால், நான் உங்களை அழிவுக்குக் கையளிப்பேன்: உங்களிடையே குடியிருப்போர் இகழ்ச்சிக்கு உள்ளாவர்: மக்களினங்களின் நிந்தைக்கு ஆளாவீர்கள்.