நெகேமியா 9:22-24 - WCV
22
“அரசுகளையும், மக்களினங்களையும் அவர்களிடம் ஒப்புவித்தீர். அவற்றின் எல்லைவரையும் பங்கிட்டளித்தீர். இவ்வாறு அவர்கள் சீகோன் நாட்டையும், எஸ்போன் அரசனின் நாட்டையும் ஓகு அரசனின் நாடான பாசானையும் உரிமையாக்கிக் கொண்டனர்.
23
அவர்களின் மக்களை விண்மீன்களைப் போன்று பெருகச் செய்தீர். அவர்கள் உட்புகுந்து உரிமையாக்கிக் கொள்ளும்படி அவர்களின் மூதாதையர்களுக்கு வாக்களித்திருந்த நாட்டிற்கு அவர்களை அழைத்துவந்தீர்.
24
அவர்களின் மக்கள் அங்குவந்து, அந்நாட்டை உரிமையாக்கிக் கொண்டனர். அவர்களின் முன்னிலையில் அந்நாட்டின் மக்களான கானானியரை அடக்கினீர். அவர்களையும் அவர்கள் மன்னர்களையும், நாட்டின் மக்களையும் அவர்கள் கையில் ஒப்புவித்து, அவர்களின் விருப்பத்தின்படி நடத்த விட்டு விட்டீர்.