யோசுவா 24:8-12 - WCV
8
யோர்தானுக்குக் கிழக்கில் வாழும் எமோரியரின் நாட்டுக்கு உங்களைக் கொண்டுவந்தேன்.அவர்கள் உங்களுடன் போரிட்டார்கள்.நான் அவர்களை உங்கள் கையில் ஒப்படைத்தேன்.அவர்களது நிலத்தை நீங்கள் உடைமையாக்கிக்கொண்டீர்கள்.உங்கள் முன்னிருந்து அவர்களை அழித்து ஒழித்தேன்.
9
மோவா பின் அரசன் சிப்போரின் மகன் பாலாக்கு இஸ்ரயேலுக்கு எதிராகப் படை திரட்டிப் போர் தொடுத்தான்.உங்களைச் சபிக்குமாறு பேகோரின் மகன் பிலயாமை அழைக்க ஆளனுப்பினான்.
10
நான் பிலயாமுக்குச் செவிகொடுக்க விரும்பவில்லை.அவன் உங்களுக்கு ஆசி வழங்கினான்.உங்களைப் பாலாக்கின் கையினின்று விடுவித்தேன்.
11
நீங்கள் யோர்தானைக் கடந்து எரிகோவுக்கு வந்தீர்கள்.எரிகோவின் மக்களும், எமோரியரும், பெரிசியரும், கானானியரும், இத்தியரும், கிர்காசியரும், இவ்வியரும், எபூசியரும், உங்களுக்கு எதிராகப் போர் தொடுத்தனர்.அவர்களையும் உங்கள் கையில் ஒப்படைத்தேன்.
12
நான் உங்களுக்கு முன்னே குளவிகளை அனுப்பினேன்.அவை உங்கள் முன்னிருந்து இரு எமோரிய அரசர்களை விரட்டின.இது நிகழ்ந்தது உங்கள் வாளாலும் அன்று: உங்கள் அம்பாலும் அன்று.