| 1 | தெக்கோவாவில் கால்நடைச் செல்வம் மிகுதியாக உடையவர்களுள் ஒருவர் ஆமோஸ். யூதாவை உசியாவும் இஸ்ரயேலை யோவாசின் மகன் எரொபவாமும் ஆண்டுவந்த காலத்தில், நிலநடுக்கம் ஏற்படுவதற்கு இரண்டாண்டுகளுக்கு முன், இஸ்ரயேலைக் குறித்து ஆமோஸ் காட்சி கண்டு கூறியவை பின்வருமாறு: | எரே 1:1 எரே 7:27 |
| 2 | “சீயோனிலிருந்து ஆண்டவர் கர்ச்சனை செய்கின்றார்: எருசலேமிலிருந்து அவர் முழுங்குகின்றார்: இடையர்களின் மேய்ச்சல் நிலங்கள் தீய்ந்து போகின்றன: கர்மேல் மலையின் உச்சியும் காய்ந்து போகின்றது” | ஆமோ 3:7 ஆமோ 3:8 நீதி 20:2 ஏசா 42:13 எரே 25:30 ஓசி 13:8 யோவே 2:11 யோவே 3:16 |
| 3 | ஆண்டவர் கூறுவது இதுவே: தமஸ்கு நகரினர் எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக, நான் கொடுத்த தண்டனைத் திர்ப்பை மாற்றவே மாட்டேன். ஏனெனில், அவர்கள் கிலயாதை இரும்புக் கருவிகளைக் கொண்டு போராடித்தார்கள். | ஆமோ 1:6 ஆமோ 1:9 ஆமோ 1:11 ஆமோ 1:13 ஆமோ 2:1 ஆமோ 2:4 ஆமோ 2:6 யோபு 5:19 யோபு 19:3 நீதி 6:16 பிரச 11:2 |
| 4 | ஆதலால் அசாயேல் வீட்டின்மேல் தீ மூளச் செய்வேன். அது பெனதாது கோட்டைகளை விழுங்கிவிடும். | ஆமோ 1:7 ஆமோ 1:10 ஆமோ 1:12 ஆமோ 1:14 ஆமோ 2:2 ஆமோ 2:5 நியா 9:19 நியா 9:20 நியா 9:57 எரே 17:27 எரே 49:27 எசே 30:8 எசே 39:6 ஓசி 8:14 |
| 5 | தமஸ்குவின் தாழ்ப்பாளை உடைப்பேன். பிக்காத்தாவேனில் குடியிருப்பவர்களையும் பெத்ஏதேனில் செங்கோல் பிடித்திருப்பவனையும் ஒழிப்பேன். ஆராமின் மக்கள் கீருக்கு நாடுகடத்தப்படுவார்கள்” என்கிறார் ஆண்டவர். | ஏசா 43:14 எரே 50:36 எரே 51:30 புலம் 2:9 நாகூ 3:13 |
| 6 | ஆண்டவர் கூறுவது இதுவே: “காசா நகரினர் எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை மாற்றவே மாட்டேன். அவர்கள் ஒரு முழு இனத்தையே ஏதோமுக்கு அடிமைகளாகக் கையளித்தார்கள்: | ஆமோ 1:3 ஆமோ 1:9 ஆமோ 1:11 |
| 7 | ஆதலால் காசாவின் கோட்டை மதில்கள்மேல் நெருப்பைக் கொட்டுவேன். அது அச்சுவர்களை விழுங்கிவிடும். | உபா 32:35 உபா 32:41-43 சங் 75:7 சங் 75:8 சங் 94:1-5 செப் 2:4 ரோம 12:19 |
| 8 | அஸ்தோதில் குடியிருப்பவர்களையும் அஸ்கலோனில் செங்கோல் பிடித்திருப்பவனையும் ஒழிப்பேன்: எக்ரோனுக்கு எதிராக என் கையை ஓங்குவேன்: பெலிஸ்தியருள் எஞ்சியிருப்போரும் அழிந்திடுவர்” என்கிறார் ஆண்டவராகிய என் தலைவர். | ஏசா 20:1 எரே 47:5 எசே 25:16 |
| 9 | ஆண்டவர் கூறுவுது இதுவே: “தீர் நகரினர் எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை மாற்றவே மாட்டேன்: ஏனெனில், அவர்கள் ஒரு முழு இனத்தையே ஏதோமுக்கு அடிமைகளாகக் கையளித்தார்கள்: சகோதர உடன்படிக்கையை அவர்கள் நினைவில் கொள்ளவில்லை. | ஏசா 23:1-18 எரே 47:4 எசே 26:1-28 யோவே 3:4-8 சகரி 9:2-4 |
| 10 | ஆதலால் தீரின் கோட்டை மதில்கள் மேல் நெருப்பைக் கொட்டுவேன்: அது அச்சுவர்களை விழுங்கிவிடும்.” | ஆமோ 1:4 ஆமோ 1:7 எசே 26:12 சகரி 9:4 |
| 11 | ஆண்டவர் கூறுவது இதுவே: “ஏதோம் எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை மாற்றவே மாட்டேன்: ஏனெனில், அவன் உறவுமுறையின் கடமைகளை மீறி வாளேந்தித் தன் சகோதரனையே துரத்தினான்: தன் ஆத்திரத்தை அடக்கி வைக்காமல் என்றென்றும் கோபத்தைக் காட்டி வந்தான்: | ஏசா 21:11 ஏசா 21:12 ஏசா 34:1-17 ஏசா 63:1-7 எரே 49:7-22 எசே 25:12-14 எசே 35:1-15 ஒபதி 1:1-14 மல்கி 1:4 |
| 12 | ஆதலால் தேமான்மேல் நெருப்பைக் கொட்டுவேன்: அது பொட்சராவின் கோட்டைகளை விழுங்கிவிடும். | ஆதி 36:11 எரே 49:7 எரே 49:20 ஒபதி 1:9 ஒபதி 1:10 |
| 13 | ஆண்டவர் கூறுவது இதுவே: “அம்மோன் மக்கள் எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை மாற்றவே மாட்டேன்: ஏனெனில், அவர்கள் தங்கள் நாட்டு எல்லைகளை விரிவுபடுத்துவதற்காகக் கிலயாதின் கர்ப்பவதிகள் வயிற்றைப் பீறிக் கிழத்தார்கள். | உபா 2:19 எரே 49:1-6 எசே 25:2-7 செப் 2:8 |
| 14 | ஆதலால், இராபாவின் கோட்டை மதில்கள்மேல் நெருப்பைக் கொட்டுவேன். அது அச்சுவர்களை விழுங்கி விடும்: அப்பொழுது, போர்க்காலத்தின் பேரிரைச்சலும், சூறாவளி நாளின் கடும் புயலும் இருக்கும். | உபா 3:11 2சாமு 12:26 எரே 49:2 எசே 25:5 |
| 15 | அவர்களுடைய அரசன் அடிமையாய்க் கொண்டு போகப்படுவான். அவனோடு அதிகாரிகளும் கொண்டு போகப்படுவார்கள்” என்கிறார் ஆண்டவர். | எரே 49:3 |