1
அநீதிக்குப் பழிவாங்கும் இறைவா! ஆண்டவரே! அநீதிக்குப் பழிவாங்கும் இறைவா, ஒளிர்ந்திடும்!
2
உலகின் நீதிபதியே, எழுந்தருளும்: செருக்குற்றோர்க்கு உரிய தண்டனையை அளியும்.
3
எத்துணைக் காலம், ஆண்டவரே! எத்துணைக் காலம் பொல்லார் அக்களிப்பர்?
4
அவர்கள் இறுமாப்புடன் பேசுகின்றனர்: தீமைசெய்வோர் அனைவரும் வீம்பு பேசுகின்றனர்.
5
ஆண்டவரே! அவர்கள் உம் மக்களை நசுக்குகின்றனர்: உமது உரிமைச் சொத்தான அவர்களை ஒடுக்குகின்றனர்.