| 1 | இஸ்ரயேல் மக்களே! கேளுங்கள்: உங்களுக்கு எதிராக-ஆம், எகிப்து நாட்டினின்று நான் அழைத்து வந்த முழுக் குடும்பமாகிய உங்களுக்கு எதிராக-ஆண்டவர் உரைக்கும் இந்த வாக்கைக் கேளுங்கள்: | 2நாளா 20:15 ஏசா 46:3 ஏசா 48:12 ஓசி 4:1 ஓசி 5:1 மீகா 3:1 வெளிப் 2:29 |
| 2 | “உலகத்திலுள்ள எல்லா மக்களினங்களுக்குள்ளும் உங்களைத்தான் நான் சிறப்பாக அறிந்துகோண்டேன்: ஆதலால், உங்கள் தீச்செயல் அனைத்திற்காகவும் நான் உங்களைத் தண்டிப்பேன். | யாத் 19:5 யாத் 19:6 உபா 7:6 உபா 10:15 உபா 26:18 உபா 32:9 சங் 147:19 ஏசா 63:19 |
| 3 | தங்களுக்குள் உடன்பாடு இல்லாமல் இருவர் சேர்ந்து நடப்பார்களோ? | ஆதி 5:22 ஆதி 6:9 ஆதி 17:1 2கொரி 6:14-16 |
| 4 | இரை அகப்படாமல் இருக்கும்போது காட்டில் சிங்கம் கர்ச்சிக்குமோ? ஒன்றையும் பிடிக்காமல் இருக்கையிலேயே குகையிலிருந்து இளஞ்சிங்கம் முழுக்கம் செய்யுமோ? | ஆமோ 3:8 ஆமோ 1:2 சங் 104:21 ஓசி 11:10 |
| 5 | வேடன் தரையில் வலைவிரிக்காதிருக்கும்போதே பறவை கண்ணியில் சிக்கிக்கொள்வதுண்டோ? ஒன்றுமே சிக்காதிருக்கும்போது பொறி தரையைவிட்டுத் துள்ளுவதுண்டோ? | பிரச 9:12 எரே 31:28 தானி 9:14 |
| 6 | நகரில் எக்காளம் ஊதப்படுமானால், மக்கள் அஞ்சி நடுங்காமல் இருப்பார்களோ? ஆண்டவர் அனுப்பவில்லையெனில், நகருக்குத் தீமை தானாக வந்திடுமோ? | எரே 4:5 எரே 6:1 எசே 33:3 ஓசி 5:8 செப் 1:16 |
| 7 | தம் ஊழியர்களாகிய இறைவாக்கினர்களுக்குத் தம் மறைபொருளை வெளிப்படுத்தாமல், தலைவராகிய ஆண்டவர் ஏதும் செய்வதில்லை. | ஆதி 6:13 ஆதி 18:17 1இரா 22:19-23 2இரா 3:17-20 2இரா 6:12 2இரா 22:13 2இரா 22:20 சங் 25:14 தானி 9:22-27 தானி 10:21 தானி 11:2 யோவா 15:15 வெளிப் 1:1 வெளிப் 1:19 வெளிப் 4:1 வெளிப் 6:1-20 |
| 8 | சிங்கம் கர்ச்சனை செய்கின்றது: அஞ்சி நடுங்காதவர் எவர்? தலைவராகிய ஆண்டவர் பேசியிருக்க, இறைவாக்கு உரைக்காதவர் எவர்? | ஆமோ 3:4 ஆமோ 1:2 வெளிப் 5:5 |
| 9 | “அசீரியாவின் கோட்டைகள் மேலும் எகிப்து நாட்டின் கோட்டைகள் மேலும் நின்றுகொண்டு இவ்வாறு பறைசாற்று: சமாரியாவின் மலைகள்மேல் வந்து கூடுங்கள்: அங்கு ஏற்படும் குழப்பங்களையும் நடக்கும் கொடுமைகளையும் பாருங்கள். | 2சாமு 1:20 எரே 2:10 எரே 2:11 எரே 31:7-9 எரே 46:14 எரே 50:2 |
| 10 | நலமானதைச் செய்ய அவர்களுக்குத் தெரியவதில்லை” என்கிறார் ஆண்டவர். “அவர்கள் தங்கள் கோட்டைகளை வன்முறைகளாலும் கொள்ளைகளாலும் நிரப்புகிறார்கள்.” | சங் 14:4 எரே 4:22 எரே 5:4 2பேது 3:5 |
| 11 | ஆகையால், தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: “பகைவன் ஒருவன் வந்து நாட்டைச் சூழந்து கொள்வான்: அரண்களையெல்லாம் தரைமட்டமாக்குவான்: உங்கள் கோட்டைகள் கொள்ளையிடப்படும். | ஆமோ 6:14 2இரா 15:19 2இரா 15:29 2இரா 17:3-6 2இரா 18:9-11 ஏசா 7:17-25 ஏசா 8:7 ஏசா 8:8 ஏசா 10:5 ஏசா 10:6 ஏசா 10:9-11 ஓசி 11:5 ஓசி 11:6 |
| 12 | ஆண்டவர் கூறுவது இதுவே: “சிங்கத்தின் வாயிலிருந்து இடையன் தன் ஆட்டின் இரண்டு கால்களையோ காதின் ஒருபகுதியையோ பிடுங்கி எடுப்பது போல, சமாரியாவில் குடியிருந்து, பஞ்சணைகள்மீதும் மெத்தைகள்மீதும் சாய்ந்து இன்புறும் இஸ்ரயேல் மக்கள் விடுவிக்கப்படுவதும் இருக்கும்.” | 1சாமு 17:34-37 ஏசா 31:4 |
| 13 | “கேளுங்கள்: யாக்கோபின் வீட்டாருக்கு எதிராகச் சான்று பகருங்கள்,” என்கிறார் தலைவரும் படைகளின் கடவுளுமாகிய ஆண்டவர். | உபா 8:19 உபா 30:18 உபா 30:19 2இரா 17:13 2இரா 17:15 2நாளா 24:19 அப் 2:40 அப் 18:5 அப் 18:6 அப் 20:21 எபே 4:17 1தெச 4:6 |
| 14 | “இஸ்ரயேலை அதன் குற்றங்களுக்காகத் தண்டிக்கும் நாளில், பெத்தேலில் உள்ள பலிபீடங்களை அழிப்பேன்: பலிபீடத்தின் கொம்புகள் வெட்டப்பட்டுத் தரையில் விழும். | யாத் 32:34 |
| 15 | குளிர்கால வேனிற்கால மாளிகைகளை இடித்துத் தள்ளுவேன்: தந்தத்தாலான வீடுகள் அழிந்து போகும்: மாபெரும் இல்லங்களும் பாழாய்ப் போகும்,” என்கிறார் ஆண்டவர். | எரே 36:22 |