3
அசீரிய மன்னன் சல்மனேசர் அவனுக்கு எதிராய்ப் படையெடுத்து வரவே, ஓசேயா அவனுக்கு அடிபணிந்து கப்பம் செலுத்தி வந்தான்.
4
ஆனால் இடையில் ஓசேயா எகிப்திய மன்னனான சோவிடம் உதவி கேட்டுத் தூதனுப்பியதோடு, அசீரியாவுக்கு ஆண்டுதோறும் செலுத்தி வந்த கப்பத்தையும் நிறுத்திக்கொண்டான். இதை அறிந்த சல்மனேசர் ஓசேயாவைப் பிடித்துச் சிறையிலிட்டான்.
5
பின்னர் அசீரியா மன்னன், நாடு முழுவதன்மேலும் படையெடுத்து, சமாரியாவுக்கு வந்து, அதை மூன்றாண்டு அளவு முற்றுகையிட்டான்.
6
ஓசேயா ஆட்சியேற்ற ஒன்பதாம் ஆண்டில், அசீரியா மன்னன் சமாரியாவைக் கைப்பற்றி, இஸ்ரயேலரை அசீரியாவுக்கு நாடு கடத்தினான். அவர்களை அலகிலும், கோசானின் ஆபோர் நதிக் கரையிலும், மேதியர் நகர்களிலும் குடியேற்றினான்.