34
தாவீது சவுலை நோக்கி உம் அடியானகிய நான் என் தந்தையின் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் போது, சிங்கமோ அல்லது கரடியோமந்தையில் புகுந்து ஆட்டைக் கவ்விக் கொண்டு ஓடினால்,
35
நான் பின் தொடர்ந்து ஓடி அதை அடித்து அதன் வாயினிற் ஆட்டைவிடுவிப்பேன்: அது என் மீது பாய்ந்தால் அதன் தாடியை பிடித்து நன்றாக அடித்துக் கொல்வேன்.
36
உம் அடியானகிய நான் சிங்கங்களையும் கரடிகளையும் இவ்வாறு கொன்று இருக்கிறேன். விருத்தசேதனமில்லாத இந்தப் பெலிஸ்தியனும் அவற்றில் ஒன்றைப் போல்தான்: ஏனெனில் அவன் வாழும் படைகளை இழிவுப்படுத்தியுள்ளான். என்றார்.
37
மேலும் தாவீது என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் ஆண்டவர் இந்தப் பெலிஸ்தியனின் கைக்கும் தப்புவிப்பார் “என்றார். அதற்குச் சவுல் தாவீதிடம் சென்று வா! ஆண்டவர் உன்னொடு இருப்பார் “என்றார்.