“இப்பொழுது, நான் உனக்கு உண்மையை வெளிப்படுத்துகிறேன்: இதோ! இன்னும் மூன்று மன்னர்கள் பாரசீகத்தில் அரியணை ஏறுவார்கள்: நான்காம் அரசன் மற்ற எல்லாரையும் விடப் பெருஞ் செல்வம் படைத்தவனாய் இருப்பான். அவன் தன் செல்வத்தால் வலிமை பெற்ற பிறகு, கிரேக்க அரசுக்கு எதிராக எல்லாரையும் தூண்டியெழுப்புவான்.