19
மீக்காயா மீண்டும் கூறியது:“ஆண்டவரின் வாக்கைக் கேளும்: ஆண்டவர் தமது அரியணையில் வீற்றிருக்கக் கண்டேன். வானகப் படைத்திரள் முழுவதும் அவரருகில் வலத்திலும் இடத்திலும் நின்றனர்.
20
அப்பொழுது ஆண்டவர் 'இராமோத்து-கிலயாதைத் தாக்கி வீழ்ச்சியுறும்படி ஆகாபைத் தூண்டிவிடக் கூடியவன் யாரேனும் உண்டா?' என்று கேட்டார். அதற்கு ஒருவன் ஒன்றைச் சொல்ல, வேறொருவன் வேறொன்னைச் சொன்னான்.
21
இறுதியாக, ஓர் ஆவி ஆண்டவர் திருமுன் வந்து நின்று, 'நான் அவனைத் தூண்டி விடுகிறேன்.' என்றது. அதற்கு ஆண்டவர், 'அது எப்படி?' என்றார்.
22
அப்பொழுது அது, 'நான் போய் அவனுடைய போலி இறைவாக்கினர் அனைவரின் வாயிலும் இருந்துகொண்டு பொய் உரைக்கும் ஆவியாய் இருப்பேன்' என்றது. அதற்கு அவர், 'நீ அவனை ஏமாற்றி வெற்றி காண்பாய். போய் அப்படியே செய்' என்றார்.
23
ஆதலால், இங்குள்ள உம்முடைய எல்லாப் போலி இறைவாக்கினரும் உம்மிடம் பொய் சொல்லும்படி ஆவியை ஆண்டவர் ஏவியிருக்கிறார். ஆண்டவர் உமக்குத் தீங்கானவற்றையே கூறியிருக்கிறார் “ என்றார்.