| 1 | விடுதலையை நாடுவோரே, ஆண்டவரைத் தேடுவோரே, எனக்குச் செவிகொடுங்கள். நீங்கள் எந்தப் பாறையினின்று செதுக்கப்பட்டீர்களோ, எந்தக் குழியினின்று தோண்டப் பட்டீர்களோ, அதை நோக்குங்கள். | ஏசா 51:4 ஏசா 51:7 ஏசா 46:3 ஏசா 46:4 ஏசா 48:12 ஏசா 55:2 ஏசா 55:3 |
| 2 | உங்கள் தந்தை ஆபிரகாமையும் உங்களைப் பெற்றெடுத்த சாராவையும் நினைத்துப் பாருங்கள்: தனியனாய் இருந்த அவனை அழைத்தேன்: அவனுக்கு ஆசி வழங்கிப் பெரும் திரளாக்கினேன். | ஆதி 15:1 ஆதி 15:2 ஆதி 18:11-13 யோசு 24:3 ரோம 4:1-5 ரோம 4:16-24 |
| 3 | ஆண்டவர் சீயோனைத் தேற்றுவார்: பாழடைந்த அதன் பகுதிகள் அனைத்திற்கும் ஆறுதல் அளிப்பார்: அதன் பாலைநிலத்தை ஏதேன்போல் அமைப்பார்: அதன் பாழ் இடங்களை ஆண்டவரின் தோட்டம்போல் ஆக்குவார். மகிழ்ச்சியும் அக்களிப்பும் அதில் காணப்படும்: நன்றிப்பாடலும் புகழ்ச்சிப் பண்ணும் அங்கே ஒலிக்கும். | ஏசா 51:12 ஏசா 12:1 ஏசா 40:1 ஏசா 40:2 ஏசா 49:13 ஏசா 54:6-8 ஏசா 61:1-3 ஏசா 66:10-14 சங் 85:8 எரே 31:12-14 எரே 31:25-14 செப் 3:14-20 2கொரி 1:3 2கொரி 1:4 |
| 4 | என் மக்களே, நான் சொல்வதைக் கேளுங்கள்: என் இனமே, எனக்குச் செவிகொடு: ஏனெனில் திருச்சட்டம் என்னிடமிருந்து புறப்பட்டுச் செல்லும்: என் நீதி மக்களினங்களுக்கு ஒளியாகத் திகழும். | ஏசா 26:2 யாத் 19:6 யாத் 33:13 சங் 33:12 சங் 106:5 சங் 147:20 1பேது 2:9 |
| 5 | நான் அளிக்கும் விடுதலை அண்மையில் உள்ளது: நான் வழங்கும் மீட்பு வெளிப்பட்டு விட்டது: என் புயங்கள் மக்களினங்கள்மேல் ஆட்சி செலுத்தும்: என் கைவன்மைமீது அவை நம்பிக்கை கொள்ளும். | ஏசா 46:13 ஏசா 56:1 உபா 30:14 சங் 85:9 மத் 3:2 ரோம 1:16 ரோம 1:17 ரோம 10:6-10 |
| 6 | வானத்தை நோக்கிக் கண்களை உயர்த்துங்கள்: கீழே மண்ணுலகை உற்றுநோக்குங்கள்: ஏனெனில், வானம் புகையென மறைந்துபோம்: மண்ணுலகம் உடையென நைந்துபோம்: அதில் வாழ்வோர் விட்டிலென மடிவர்: என் மீட்போ என்றென்றும் நிலைக்கும்: என் விடுதலைக்கு முடிவே இராது. | ஏசா 40:26 உபா 4:19 சங் 8:3 சங் 8:4 |
| 7 | நேர்மைதனை அறிந்தோரே, என் சட்டத்தை இதயத்தே தாங்கும் மக்களினத்தாரே, எனக்குச் செவி கொடுங்கள்: மானிடரின் நிந்தைக்கு அஞ்சாதீர்கள்: அவர்தம் இழிசொல் கேட்டுக் கலங்காதீர்கள். | பிலிப் 3:8 பிலிப் 3:10 தீத் 2:11 தீத் 2:12 |
| 8 | ஏனெனில், பொட்டுப்பூச்சி அவர்களை ஆடையெனத் தின்றழிக்கும்: அரிப்புழு அவர்களை ஆட்டு மயிரென அரித்தொழிக்கும்: நான் அளிக்கும் விடுதலையோ என்றென்றும் நிலைக்கும்: நான் வழங்கும் மீட்போ தலைமுறைதோறும் நீடிக்கும். | ஏசா 50:9 ஏசா 66:24 யோபு 4:19 யோபு 13:28 ஓசி 5:12 |
| 9 | விழித்தெழு, விழித்தெழு, ஆண்டவரின் புயமே, ஆற்றலை அணிந்து கொள்: பண்டைய நாள்களிலும் முந்தைய தலைமுறைகளிலும் செய்ததுபோல் விழித்தெழு: இராகாபைத் துண்டு துண்டாக வெட்டியதும் பறவை நாகத்தை ஊடுறவக் குத்தியதும் நீ அன்றோ? | ஏசா 51:17 ஏசா 27:1 சங் 7:6 சங் 44:23 சங் 59:4 சங் 78:65 ஆபகூ 2:19 |
| 10 | பேராழ நீர்த்திரளாம் கடலை வற்றச்செய்து, ஆழ்பகுதிகளில் பாதை அமைத்து, மீட்கப்பட்டோரை கடக்கச் செய்ததும் நீயே அன்றோ? | ஏசா 42:15 ஏசா 43:16 ஏசா 50:2 ஏசா 63:11 ஏசா 63:12 யாத் 14:21 யாத் 14:22 யாத் 15:13 சங் 74:13 |
| 11 | ஆண்டவரால் மீட்கப்பட்டோர் திரும்பி வருவர்: மகிழ்ந்து பாடிக்கொண்டே சீயோனுக்கு வருவர்: முடிவில்லா மகிழ்ச்சி அவர்கள் தலைமேல் தங்கும்: அக்களிப்பும் அகமகிழ்ச்சியும் அடைவர்: துயரமும் பெருமூச்சும் ஒழிந்துபோம். | ஏசா 35:10 ஏசா 44:23 ஏசா 48:20 ஏசா 49:13 எரே 30:18 எரே 30:19 எரே 31:11 எரே 31:12 எரே 33:11 அப் 2:41-47 வெளிப் 5:9-13 வெளிப் 7:9 வெளிப் 7:10 வெளிப் 14:1-4 வெளிப் 19:1-7 |
| 12 | உங்களுக்கு ஆறுதல் வழங்குபவர் நானேதான்! மடிந்து போகும் மனிதருக்கும் புல்லென மாயும் மானிடருக்கும் நீ அஞ்சுவது ஏன்? | ஏசா 51:3 ஏசா 43:25 ஏசா 57:15-18 ஏசா 66:13 யோவா 14:18 யோவா 14:26 யோவா 14:27 அப் 9:31 2கொரி 1:3-5 2கொரி 7:5 2கொரி 7:6 |
| 13 | உன்னை உருவாக்கிய ஆண்டவரை நீ ஏன் மறந்துவிட்டாய்? வானங்களை விரித்துப் பரப்பியவரும், மண்ணுலகிற்கு அடித்தளமிட்டவரும் அவர் அன்றோ? உன்னை ஒடுக்கி அழித்துவிட முயன்றவன் சீற்றத்தை முன்னிட்டு நீ ஏன் எந்நாளும் ஓய்வின்றி நடுங்குகிறாய்? உன்னை ஒடுக்கியவனின் சினம் எங்கே? | ஏசா 17:10 உபா 32:18 எரே 2:32 |
| 14 | கூனிக் குறுகியவன் விரைவில் விடுதலை பெறுவான்: அவன் குழியில் செத்து வீழ்வதில்லை: அவனுக்கு உணவு இல்லாமல் போகாது. | ஏசா 48:20 ஏசா 52:2 எஸ்றா 1:5 அப் 12:7 அப் 12:8 |
| 15 | உன் கடவுளாகிய ஆண்டவர் நானே! கடலைக் கலக்கி அலைகளைக் கொந்தளிக்கச் செய்பவர் நானே! “படைகளின் ஆண்டவர்” என்பது அவர்தம் பெயராம்! | ஏசா 51:10 நெகே 9:11 யோபு 26:12 சங் 74:13 சங் 114:3-5 சங் 136:13 எரே 31:35 ஆமோ 9:5 ஆமோ 9:6 |
| 16 | நான் வானங்களை விரித்துப் பரப்பினேன்: மண்ணுலகிற்கு அடித்தளம் அமைத்தேன்: சீயோனை நோக்கி, “நீ என் மக்கள்” என்றேன்: என் சொற்களை உன் நாவில் அருளினேன்: என் கை நிழலில் உன்னை மறைத்துக்கொண்டேன். | ஏசா 50:4 ஏசா 59:21 உபா 18:18 யோவா 3:34 யோவா 8:38-40 யோவா 17:8 வெளிப் 1:1 |
| 17 | விழித்தெழு, விழித்தெழு, ஆண்டவர் கையினின்று, சினக் கிண்ணத்தைக் குடித்தவளே, மதியை மயக்கும் அக்கிண்ணத்தை அடிமண்டிவரை குடித்தவளே, எருசலேமே, எழுந்து நில். | ஏசா 51:9 ஏசா 52:1 ஏசா 60:1 ஏசா 60:2 நியா 5:12 1கொரி 15:34 எபே 5:14 |
| 18 | அவள் பெற்றெடுத்த புதல்வருள் அவளுக்கு வழிகாட்டுவார் எவருமில்லை: அவள் வளர்த்துவிட்ட ஆண் மக்களுள் அவளுக்குக் கைகொடுப்பார் யாருமில்லை! | ஏசா 3:4-8 ஏசா 49:21 சங் 88:18 சங் 142:4 மத் 9:36 மத் 15:14 |
| 19 | இருவகைத் தீங்குகள் உனக்கு நேரிட்டன, உனக்காகப் புலம்பியழுபவன் எவன்? வீழ்ச்சி-அழிவு, பஞ்சம்-வாள் இவை உன்னை வாட்டின: யார் உன்னைத் தேற்றுவார்? | ஏசா 47:9 எசே 14:21 |
| 20 | உன் பிள்ளைகள் மயக்கமுற்றனர்: வலையில் சிக்கிய கலைமான் போல் அவர்கள் ஒவ்வொரு தெருமுனையிலும் வீழ்ந்துகிடக்கின்றனர்: ஆண்டவரின் சினத்திற்கும் உன் கடவுளின் கண்டிப்புக்கும் உள்ளாயினர். | ஏசா 40:30 எரே 14:18 புலம் 1:15 புலம் 1:19 புலம் 2:11 புலம் 2:12 புலம் 4:2 புலம் 5:13 |
| 21 | ஆதலால், சிறுமையுற்றவளே, திராட்சை இரசம் இன்றியே குடிவெறி கொண்டவளே, இதைக் கேள். |
| 22 | தம் மக்கள் சார்பாக வழக்காடும் உன் கடவுளாகிய ஆண்டவர், உன் தலைவர் கூறுவது இதுவே: “இதோ, உன்னை மதிமயக்கும் கிண்ணத்தை உன் கையினின்றும் அகற்றிவிட்டேன்: என் சினக் கிண்ணத்தினின்று நீ இனிக் குடிக்கவேமாட்டாய்.” | 1சாமு 25:39 சங் 35:1 நீதி 22:23 எரே 50:34 எரே 51:36 யோவே 3:2 மீகா 7:9 |
| 23 | அக்கிண்ணத்தை உன்னை ஒடுக்கினோர் கையில் திணிப்பேன்: “நாங்கள் கடந்து செல்வதற்கு நீ முகங்குப்புற விழுந்துகிட” என்று அவர்கள் உன்னிடம் சொன்னார்களே! உன் முதுகை அவர்கள் தரையாகவும், கடந்து செல்வோருக்குக்குத் தெருவாகவும் மாற்றினார்களே! | ஏசா 49:25 ஏசா 49:26 நீதி 11:8 நீதி 21:18 எரே 25:17-29 சகரி 12:2 வெளிப் 17:6-8 வெளிப் 17:18-8 |