11
ஆபிரகாமும் சாராவும் வயது முதிர்ந்தவர்களாய் இருந்தனர்.சாராவுக்கு மாதவிடாய் நின்று போயிருந்தது.
12
எனவே, சாரா தமக்குள் சிரித்து, “நானோ கிழவி: என் தலைவரோ வயது முதிர்ந்தவர்.எனக்கா இன்பம்?” என்றாள்.
13
அப்போது ஆண்டவர் ஆபிரகாமை நோக்கி, “நான் வயது முதிர்ந்தவளாய் இருக்க, எனக்கு உண்மையில் பிள்ளை பிறக்குமா” என்று சொல்லி சாரா ஏன் இப்படிச் சிரித்தாள்? ஆண்டவரால் ஆகாதது எதுவும் உண்டோ!