1ஆண்டவர் கூறுவது இதுவே: உன் தாயைத் தள்ளி வைத்ததற்கான மணமுறிவுச் சீட்டு எங்கே? உங்களை விற்றுவிடும் அளவுக்கு எவனுக்கு நான் கடன்பட்டிருந்தேன்? இதோ, உங்கள் தீச்செயல்களை முன்னிட்டே நீங்கள் விற்கப்பட்டீர்கள்: உங்கள் வன்செயல்களின் பொருட்டே உங்கள் தாய் தள்ளி வைக்கப்பட்டாள்.உபா 24:1-4 எரே 3:1 எரே 3:8 ஓசி 2:2-4 மாற் 10:4-12 2நான் வந்தபோது ஒருவனும் இல்லாமற் போனதேன்? நான் அழைத்தபோது பதில் தர எவனும் இல்லாததேன்? உங்களை மீட்க இயலாதவாறு என்கை சிறுத்துவிட்டதோ? விடுவிக்கக் கூடாதவாறு என் ஆற்றல் குன்றிவிட்டதோ? இதோ என் கடிந்துரையால் கடல்தனை வற்றச் செய்கிறேன்: ஆறுகளைப் பாலையாக்குகிறேன்: அவற்றின் மீன்கள் நீரின்றி நாறுகின்றன: தாகத்தால் சாகின்றன.ஏசா 59:16 ஏசா 65:12 ஏசா 66:4 நீதி 1:24 எரே 5:1 எரே 7:13 எரே 8:6 எரே 35:15 ஓசி 11:2 ஓசி 11:7 யோவா 1:11 யோவா 3:19 3வான்வெளியைக் காரிருளால் உடுத்துவிக்கின்றேன்: அதனைச் சாக்கு உடையால் போர்த்துகின்றேன்.யாத் 10:21 சங் 18:11 சங் 18:12 மத் 27:45 வெளிப் 6:12 4நலிந்தவனை நல்வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நான் பெற்றிட, ஆண்டவராகிய என் தலைவர், கற்றோனின் நாவை எனக்கு அளித்துள்ளார்: காலைதோறும் அவர் என்னைத் தட்டி எழுப்புகின்றார்: கற்போர் கேட்பது போல் நானும் செவிகொடுக்கச் செய்கின்றார்.யாத் 4:11 யாத் 4:12 சங் 45:2 எரே 1:9 மத் 22:46 லூக் 4:22 லூக் 21:15 யோவா 7:46 5ஆண்டவராகிய என் தலைவர் என் செவியைத் திறந்துள்ளார்: நான் கிளர்ந்தெழவில்லை: விலகிச் செல்லவுமில்லை.ஏசா 48:8 சங் 40:6-8 மத் 26:39 யோவா 8:29 யோவா 14:31 யோவா 15:10 பிலிப் 2:8 எபிரெ 5:8 எபிரெ 10:5-9 6அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோர்க்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை.புலம் 3:30 மீகா 5:1 மத் 5:39 மத் 26:67 மத் 27:26 மாற் 14:65 மாற் 15:19 லூக் 22:63 லூக் 22:64 யோவா 18:22 எபிரெ 12:2 7ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார்: நான் அவமானம் அடையேன்: என் முகத்தைக் கற்பாறை ஆக்கிக் கொண்டேன்: இழிநிலையை நான் அடைவதில்லை என்றறிவேன்.ஏசா 50:9 ஏசா 42:1 ஏசா 49:8 சங் 89:21-27 சங் 110:1 யோவா 16:33 எபிரெ 13:6 8நான் குற்றமற்றவன் என எனக்குத் தீர்ப்பு வழங்குபவர் அருகில் உள்ளார்: என்னோடு வழக்காடுபவன் எவன்? நாம் இருவரும் எதிர் எதிரே நிற்போம்: என்மீது குற்றஞ்சாட்டுபவன் எவன்? அவன் என்னை நெருங்கட்டும்.ரோம 8:32-34 1தீமோ 3:16 9இதோ, ஆண்டவராகிய என் தலைவர் எனக்குத் துணைநிற்கின்றார்: நான் குற்றவாளி எனத் தீர்ப்பிட யாரால் இயலும்? அவர்கள் அனைவரும் துணியைப் போல் இற்றுப்போவார்கள்: புழுக்கள் அவர்களை அரித்துவிடும்.ஏசா 51:6-8 யோபு 13:28 சங் 39:11 சங் 102:26 எபிரெ 1:11 எபிரெ 1:12 10உங்களுள் ஆண்டவருக்கு அஞ்சி நடந்து அவர்தம் அடியானின் சொல்லுக்குச் செவிசாய்ப்பவன் எவன்? அவன் ஒளிபெற இயலா நிலையில் இருளில் நடந்துவருபவன்: ஆண்டவரின் பெயர்மீது நம்பிக்கை கொண்டு தன்கடவுளைச் சார்ந்து கொள்பவன்.சங் 25:12 சங் 25:14 சங் 111:10 சங் 112:1 சங் 128:1 பிரச 12:13 மல்கி 3:16 11ஆனால், நெருப்பு மூட்டித் தீப்பிழம்புகளால் சூழப்பட்டவர்களே: நீங்கள் அனைவரும் உங்கள் நெருப்பின் வெளிச்சத்திலும், நீங்கள் மூட்டிய தீப்பிழம்புகளிடையேயும் நடங்கள்: என் கையினின்று உங்களுக்குக் கிடைப்பது இதுவே: நீங்கள் வேதனையின் நடுவே உழன்று கிடப்பீர்கள்.ஏசா 28:15-20 ஏசா 30:15 ஏசா 30:16 ஏசா 55:2 சங் 20:7 சங் 20:8 எரே 17:5-7 யோனா 2:8 மத் 15:6-8 ரோம 1:21 ரோம 1:22 ரோம 10:3