சங்கீதம் 89:21-27 - WCV
21
என் கை எப்பொழுதும் அவனோடு இருக்கும்: என் புயம் உண்மையாகவே அவனை வலிமைப்படுத்தும்.
22
எதிரி எவனாலும் அவனை வஞ்சிக்க முடியாது: தீயவன் எவனாலும் அவனை ஒடுக்க இயலாது.
23
அவனுடைய எதிரிகளை அவன் கண்முன் நசுக்குவேன்: அவனை வெறுப்போரை வெட்டிக் கொல்வேன்.
24
என் வாக்குப் பிறழாமையும் பேரன்பும் அவனோடு இருக்கும்: என் பெயரால் அவனது வலிமை உயர்த்தப்படும்.
25
அவன் கையைக் கடல்வரைக்கும் அவன் வலக்கையை ஆறுகள் வரைக்கும் எட்டச் செய்வேன்.
26
'நீரே என் தந்தை, என் இறைவன், என் மீட்பின் பாறை' என்று அவன் என்னை அழைப்பான்.
27
நான் அவனை என் தலைப்பேறு ஆக்குவேன்: மண்ணகத்தின் மாபெரும் மன்னன் ஆக்குவேன்.