6
வானத்தை நோக்கிக் கண்களை உயர்த்துங்கள்: கீழே மண்ணுலகை உற்றுநோக்குங்கள்: ஏனெனில், வானம் புகையென மறைந்துபோம்: மண்ணுலகம் உடையென நைந்துபோம்: அதில் வாழ்வோர் விட்டிலென மடிவர்: என் மீட்போ என்றென்றும் நிலைக்கும்: என் விடுதலைக்கு முடிவே இராது.
7
நேர்மைதனை அறிந்தோரே, என் சட்டத்தை இதயத்தே தாங்கும் மக்களினத்தாரே, எனக்குச் செவி கொடுங்கள்: மானிடரின் நிந்தைக்கு அஞ்சாதீர்கள்: அவர்தம் இழிசொல் கேட்டுக் கலங்காதீர்கள்.
8
ஏனெனில், பொட்டுப்பூச்சி அவர்களை ஆடையெனத் தின்றழிக்கும்: அரிப்புழு அவர்களை ஆட்டு மயிரென அரித்தொழிக்கும்: நான் அளிக்கும் விடுதலையோ என்றென்றும் நிலைக்கும்: நான் வழங்கும் மீட்போ தலைமுறைதோறும் நீடிக்கும்.