சங்கீதம் 40:6-8 - WCV
6
பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை: எரிபலியையும் பாவம் போக்கும் பலியையும் நீர் கேட்கவில்லை: ஆனால், என் செவிகள் திறக்கும்படி செய்தீர்.
7
எனவே, 'இதோ வருகின்றேன்: என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது:
8
என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்: உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது' என்றேன் நான்.