வெளிப்படுத்தல் 17:6-8 - WCV
6
அப்பெண் இறைமக்களின் இரத்தத்தையும் இயேசுவின் சாட்சிகளுடைய இரத்தத்தையும் குடித்து வெறி கொண்டிருக்கக் கண்டேன். நான் அவளைக் கண்டபோது பெரும் வியப்பில் ஆழ்ந்தேன்.
7
அதற்கு அந்த வானதூதர் என்னிடம் கூறியது: “நீ வியப்பு அடைவது ஏன்? அப்பெண்ணைப்பற்றிய மறைபொருளையும், ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் கொண்டதாய் அவளைச் சுமந்து செல்லும் விலங்கின் மறைபொருளையும் உனக்குச் சொல்கிறேன்.
8
நீ கண்ட விலங்கு முன்பு உயிரோடு இருந்தது: இப்போது இல்லை. படுகுழியிலிருந்து அது ஏறிவரவிருக்கிறது: ஆனால் அழிந்துவிடும். உலகம் தோன்றியமுதல் வாழ்வின் நூலில் பெயர் எழுதப்படாத மண்ணுலகுவாழ் மக்கள் அனைவரும் அந்த விலங்கைக் கண்டு வியப்பு அடைவார்கள்: ஏனெனில் அது முன்பு உயிரோடு இருந்தது, இப்பொழுது இல்லை. ஆனால், மீண்டும் உயிர் பெற்று வரும்.