| 1 | அந்நாள்களில், எசேக்கியா நோய்வாய்ப்பட்டு சாகும் நிலையில் இருந்தார்: ஆமோட்சின் மகனான எசாயா இறைவாக்கினர் அவரைக் காணவந்து அவரை நோக்கி, “ஆண்டவர் கூறுவது இதுவே: நீர் உம் வீட்டுக்காரியத்தை ஒழுங்குபடுத்தும்: ஏனெனில் நீர் சாகப்போகிறீர்: பிழைக்க மாட்டீர்” என்றார். | 2இரா 20:1-11 2நாளா 32:24 யோவா 11:1-5 அப் 9:37 பிலிப் 2:27-30 |
| 2 | எசேக்கியா சுவர்ப்புறம் தம் முகத்தைத் திருப்பிக் கொண்டு ஆண்டவரிடம் மன்றாடி, | 1இரா 8:30 சங் 50:15 சங் 91:15 மத் 6:6 |
| 3 | “ஆண்டவரே, நான் உம் திருமுன் உண்மைவழியில் மாசற்ற மனத்துடன் நடந்து வந்ததையும் உம் பார்வைக்கு நலமானவற்றைச் செய்ததையும் நினைந்தருளும்” என்று கூறிக் கண்ணீர் சிந்தித் தேம்பித் தேம்பி அழுதார். | நெகே 5:19 நெகே 13:14 நெகே 13:22 நெகே 13:31 சங் 18:20-27 சங் 20:1-3 எபிரெ 6:10 |
| 4 | அப்போது ஆண்டவரின் வாக்கு எசாயாவுக்கு அருளப்பட்டது: |
| 5 | “நீ எசேக்கியாவிடம் சென்று கூறவேண்டியது: உன் தந்தை தாவீதின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: உன் கண்ணீரைக் கண்டேன். இதோ நீ வாழும் காலத்தை இன்னும் பதினைந்து ஆண்டு மிகுதியாக்குவேன். | 2சாமு 7:3-5 1நாளா 17:2-4 |
| 6 | உன்னையும் இந்த நகரையும் அசீரிய மன்னன் கையினின்று விடுவிப்பேன்: இந்த நகரைப் பாதுகாப்பேன். | ஏசா 12:6 ஏசா 31:4 ஏசா 37:35 2நாளா 32:22 2தீமோ 4:17 |
| 7 | தாம் கூறிய இந்த வார்த்தையை ஆண்டவர் நிறைவேற்றுவார் என்பதற்கு அவர் உமக்களிக்கும் அடையாளம்: | ஏசா 38:22 ஏசா 7:11-14 ஏசா 37:30 ஆதி 9:13 நியா 6:17-22 நியா 6:37-39 2இரா 20:8-21 |
| 8 | இதோ, சாயும் கதிரவனின் நிழல் ஆகாசின் கதிரவக் கடிகையில் பத்துப் பாத அளவு பின்னிடச் செய்வேன்.” அவ்வாறே சாயும் கதிரவனின் நிழல் அக் கடிகையில் பத்துப்பாத அளவு பின்னிட்டது. | யோசு 10:12-14 2இரா 20:11 2நாளா 32:24 2நாளா 32:31 மத் 16:1 |
| 9 | யூதா அரசர் எசேக்கியா நோயுற்று, நோயினின்று குணமடைந்தபின் தீட்டிய எழுத்தோவியம்: | ஏசா 12:1-6 யாத் 15:1-21 நியா 5:1-31 1சாமு 2:1-10 சங் 18:1 சங் 30:11 சங் 30:12 சங் 107:17-22 சங் 116:1-4 சங் 118:18 சங் 118:19 யோனா 2:1-9 |
| 10 | 'என் வாழ்நாள்களின் நடுவில் இவ்வுலகை விட்டுச் செல்ல வேண்டுமே! நான் வாழக்கூடிய எஞ்சிய ஆண்டுகளைப் பாதாளத்தின் வாயில்களில் கழிக்க நேருமே!' என்றேன். | ஏசா 38:1 யோபு 6:11 யோபு 7:7 யோபு 17:11-16 2கொரி 1:9 |
| 11 | 'வாழ்வோர் உலகில் ஆண்டவரை நான் காண இயலாதே! மண்ணுலகில் குடியிருப்போருள் எந்த மனிதரையும் என்னால் பார்க்க முடியாதே!' என்றேன். | யோபு 35:14 யோபு 35:15 சங் 6:4 சங் 6:5 சங் 27:13 சங் 31:22 சங் 116:8 சங் 116:9 பிரச 9:5 பிரச 9:6 |
| 12 | என் உறைவிடம் மேய்ப்பவனின் கூடாரத்தைப்போல பெயர்க்கப்பட்டு என்னைவிட்டு அகற்றப்படுகிறது. நெசவாளன் பாவைச் சுருட்டுவதுபோல் என் வாழ்வை முடிக்கிறேன். தறியிலிருந்து அவர் என்னை அறுத்தெறிகிறார்: காலை தொடங்கி இரவுக்குள் எனக்கு முடிவுகட்டுவீர், | யோபு 7:7 சங் 89:45-47 சங் 102:11 சங் 102:23 சங் 102:24 |
| 13 | துணை வேண்டிக் காலைவரை கதறினேன்: சிங்கம்போல் அவர் என் எலும்புகள் அனைத்தையும் நொறுக்குகிறார்: காலை தொடங்கி இரவுக்குள் நீர் எனக்கு முடிவுகட்டுவீர். | 1இரா 13:24-26 1இரா 20:36 யோபு 10:16 யோபு 10:17 யோபு 16:12-14 சங் 39:10 சங் 50:22 சங் 51:8 தானி 6:24 ஓசி 5:14 1கொரி 11:30-32 |
| 14 | சிட்டுக்குருவி போலும் நாரை போலும் கூக்குரலிடுகிறேன்: மாடப்புறாப்போல் விம்முகிறேன்: மேல்நோக்கிப் பார்த்து என் கண்கள் சோர்வடைந்தன: என் தலைவரே, நான் ஒடுக்கப்படுகிறேன்: எனக்குத் துணையாய் இரும். | யோபு 30:29 சங் 102:4-7 |
| 15 | நான் அவரிடம் என்ன சொல்வேன்? என்ன கூறுவேன்? ஏனெனில் அவரே இதைச் செய்தார்: மனக்கசப்பால் உறக்கமே எனக்கு இல்லாமற் போயிற்று. | யோசு 7:8 எஸ்றா 9:10 சங் 39:9 சங் 39:10 யோவா 12:27 |
| 16 | என் தலைவரே, நான் உம்மையே நம்புகின்றேன்: என் உயிர் உமக்காகவே வாழ்கின்றது: எனக்கு உடல்நலத்தை நல்கி நான் உயிர் பிழைக்கச் செய்வீர். | ஏசா 64:5 உபா 8:3 யோபு 33:19-28 சங் 71:20 மத் 4:4 1கொரி 11:32 2கொரி 4:17 எபிரெ 12:10 எபிரெ 12:11 |
| 17 | இதோ, என் கசப்புமிகு அனுபவத்தை நலமாக மாற்றினீர்: மனங்கனிந்து அழிவின் குழியிலிருந்து என் உயிரைக் காத்தீர்: என் பாவங்கள் அனைத்தையும் உன் முதுகுக்குப் பின்னால் எறிந்து விட்டீர். | யோபு 3:25 யோபு 3:26 யோபு 29:18 சங் 30:6 சங் 30:7 |
| 18 | பாதாளம் உம்மைப் போற்றிப் பாடாது: சாவு உம்மைப் புகழந்து ஏத்தாது: பாதாளக் குழிக்குள் இறங்குவோர், நம்பிக்கைக்குரிய உம்மை நம்பியிருப்பதில்லை! | சங் 6:5 சங் 30:9 சங் 88:11 சங் 115:17 சங் 115:18 பிரச 9:10 |
| 19 | நான் இன்று உம்மைப் புகழ்ந்து போல் வாழ்வோரே, வாழ்வோர் மட்டுமே உம்மைப் போற்றிப் பாடுவர். தந்தையர் தம் பிள்ளைகளுக்கு உமது வாக்குப் பிறழாமை குறித்துப் போதிப்பர். | சங் 146:2 பிரச 9:10 யோவா 9:4 |
| 20 | ஆண்டவர் எனக்கு நலமளிக்க மனம்கொண்டார்: ஆண்டவரின் இல்லத்தில் எம் புகழ்ப்பாக்களை வாழ்நாளெல்லாம் இசைக்கருவி மீட்டிப் பாடுவோம். | சங் 9:13 சங் 9:14 சங் 27:5 சங் 27:6 சங் 30:11 சங் 30:12 சங் 51:15 சங் 66:13-15 சங் 145:2 |
| 21 | “எசேக்கியா நலமுடைய, ஓர் அத்திப்பழ அடையைக் கொண்டுவந்து பிளவையின்மேல் வைத்துக் கட்டுங்கள்” என்று எசாயா பதில் கூறியிருந்தார். | 2இரா 20:7 மாற் 7:33 யோவா 9:6 |
| 22 | ஏனெனில், “ஆண்டவரின் இல்லத்திற்கு என்னால் போக முடியும் என்பதற்கு எனக்கு அடையாளம் யாது?” என்று எசேக்கியா அரசர் கேட்டிருந்தார். | 2இரா 20:8 சங் 42:1 சங் 42:2 சங் 84:1 சங் 84:2 சங் 84:10-12 சங் 118:18 சங் 118:19 சங் 122:1 யோவா 5:14 |