45
அவரது இளமையைச் சுருக்கிவிட்டீர்: அவருக்கு வெட்கத்தை ஆடையாக்கினீர். (சேலா)
46
எவ்வளவு காலம் மறைந்திருப்பீர் ஆண்டவரே! என்றென்றுமா? எவ்வளவு காலம் உமது சினம் நெருப்பென எரிந்து கொண்டிருக்கும்?
47
எங்கள் ஆயுள் எவ்வளவு குறுகியது என்பதை நினைத்தருளும்: மானிடர் அனைவரையும் வீணாகவா படைத்துள்ளீர்?