சங்கீதம் 18:20-27 - WCV
20
ஆண்டவர் எனது நேர்மைக்கு உரிய பயனை எனக்களித்தார்: என் மாசற்ற செயலுக்கு ஏற்ப கைம்மாறு செய்தார்.
21
ஏனெனில், நான் ஆண்டவர் காட்டிய நெறியைக் கடைப்பிடித்தேன்: பொல்லாங்கு செய்து என் கடவுளை விட்டு அகலவில்லை.
22
அவர்தம் நீதிநெறிகளை எல்லாம் என் கண்முன் வைத்திருந்தேன்: அவர்தம் விதிமுறைகளை நான் ஒதுக்கித் தள்ளவில்லை.
23
அவர் முன்னிலையில் நான் மாசற்றவனாய் இருந்தேன்: தீங்கு செய்யாவண்ணம் என்னைக் காத்துக் கொண்டேன்.
24
ஆண்டவர், என் நேர்மைக்கு உரிய பயனை அளித்தார்: அவர்தம் பார்வையில் நான் குற்றம் அற்றவனாய் இருந்தேன்.
25
ஆண்டவரே, மாறா அன்பர்க்கு மாறா அன்பராகவும் மாசற்றோர்க்கு மாசற்றவராகவும் நீர் விளங்குவீர்.
26
தூயோருக்குத் தூயவராகவும் வஞ்சகர்க்கு விவேகியாகவும் உம்மை நீர் காட்டுகின்றீர்.
27
எளியோருக்கு நீர் மீட்பளிக்கின்றீர்: செருக்குற்றோரை ஏளனத்துடன் நீர் பார்க்கின்றீர்.