சங்கீதம் 116:1-4 - WCV
1
அல்லேலூயா! ஆண்டவர்மீது அன்புகூர்கின்றேன்: ஏனெனில், எனக்கு இரங்குமாறு நான் எழுப்பிய குரலை அவர் கேட்டருளினார்.
2
அவரை நான் மன்றாடிய நாளில், எனக்கு அவர் செவிசாய்த்தார்.
3
சாவின் கயிறுகள் என்னைப் பிணித்துக் கொண்டன: பாதாளத்தின் துன்பங்கள் என்னைப் பற்றிக் கொண்டன: துன்பமும் துயரமும் என்னை ஆட்கொண்டன.
4
நான் ஆண்டவரது பெயரைத் தொழுதேன்: 'ஆண்டவரே! என் உயிரைக் காத்தருளும்' என்று கெஞ்சினேன்.