19
படுக்கையில் படும் வேதனையினாலும் எலும்பில் தீரா வலியினாலும் அவர்கள் கண்டித்துத் திருத்தப்படுகின்றார்கள்.
20
அப்போது அவர்களின் உயிர் உணவையும், அவர்களின் ஆன்மா அறுசுவை உண்டியையும் அருவருக்கும்.
21
அவர்களின் சதை கரைந்து மறையும்: காணப்படா அவர்களின் எலும்புகள் வெளியே தெரியும்.
22
அவர்களின் ஆன்மா குழியினையும் அவர்களின் உயிர் அழிப்போரையும் அணுகும்.
23
மனிதர் சார்பாக இருந்து, அவர்களுக்கு நேர்மையானதைக் கற்பிக்கும் ஓர் ஆயிரத்தவராகிய வானதூதர்
24
அவர்களின் மீது இரங்கி, “குழியில் விழாமல் இவர்களைக் காப்பாற்றும்: ஏனெனில், இவர்களுக்கான மீட்டுத் தொகை என்னிடமுள்ளது:
25
இவர்களின் மேனி இளைஞனதைப்போல் ஆகட்டும்: இவர்கள் இளமையின் நாள்களுக்குத் திரும்பட்டும்”
26
என்று கடவுளிடம் மன்றாடினால், அவர் அவர்களை ஏற்றுக் கொள்வார்: அவர்தம் முகத்தை மகிழ்ச்சியோடு அவர்கள் காணச் செய்வார்: அவர்களுக்குத் தம் மீட்பை மீண்டும் அளிப்பார்.
27
அவர்கள் மனிதர் முன் இவ்வாறு அறிக்கையிடுவர்: 'நாங்கள் பாவம் செய்தோம்: நேரியதைக் கோணலாக்கினோம்: இருப்பினும் அதற்கேற்ப நாங்கள் தண்டிக்கப்படவில்லை:
28
எங்கள் ஆன்மாவைக் குழியில் விழாது அவர் காத்தார்: எங்கள் உயிர் ஒளியைக் காணும்.'