12
கடவுள் எமேரியரை இஸ்ரயேலர் கையில் ஒப்படைத்த அன்று யோசுவா ஆண்டவரிடம் பேசினார்.அவர் இஸ்ரயேலர் கண்முன்,”கதிரவனே! கிபயோனில் நில்! நிலவே! அய்யலோன் பள்ளத்தாக்கில் நில்” என்றார்.
13
அவர்கள் தம் எதிரியின் மீது வஞ்சம் தீர்க்கும்வரை கதிரவனும் நிலவும் அசையாது நின்றன.இது யாசாரின் நூலில் எழுதப்படவில்லையா?”கதிரவன் நடுவானில் நின்றது.ஒரு நாள் முழுவதும் அது இறங்குவதற்கு விரையவில்லை”.
14
ஆண்டவர் மனிதக் குரலைக் கேட்டு, இஸ்ரயேலுக்காகப் போரிட்ட அந்நாளைப்போன்று அதற்கு முன்னும் பின்னும் இருந்ததில்லை.