12
நலமுடன் இருந்தேன் நான்: தகர்த்தெறிந்தார் என்னை அவர்: பிடரியைப் பிடிந்து என்னை நொறுக்கினார்: என்னையே தம் இலக்காக ஆக்கினார்.
13
அவர் தம் வில்வீரர் என்னை வளைத்துக் கொண்டனர்: என் ஈரலை அவர் பிளந்து விட்டார்: ஈவு இரக்கமின்றி என் ஈரலின் பித்தை மண்ணில் சிந்தினார்.
14
முகத்தில் அடியடியென்று என்னை அடித்தார்: போர்வீரன்போல் என்மீது பாய்ந்தார்.