| 1 | ஆமோட்சின் மகன் எசாயா பாபிலோனைக் குறித்துக் கண்ட காட்சியில் அருளப்பட்ட திருவாக்கு: | ஏசா 14:28 ஏசா 15:1 ஏசா 17:1 ஏசா 19:1 ஏசா 21:1 ஏசா 21:11 ஏசா 21:13 ஏசா 22:1 ஏசா 22:25 ஏசா 23:1 எரே 23:33-38 எசே 12:10 நாகூ 1:1 ஆபகூ 1:1 சகரி 9:1 சகரி 12:1 மல்கி 1:1 |
| 2 | வறண்ட மலை ஒன்றில் போர்க்கொடி ஏற்றுங்கள்: போர்வீரர்களை உரக்கக் கூவி அழையுங்கள்: உயர்குடி மக்கள் வாழும் நகர வாயில்களுக்குள் நுழையும்படி, அவர்களுக்குக் கையசைத்துச் சைகை காட்டுங்கள். | ஏசா 5:26 ஏசா 11:12 ஏசா 18:3 எரே 50:2 எரே 51:27 எரே 51:28 |
| 3 | போருக்கென அர்ப்பணிக்கப்பட்டுள்ள என் வீரர்களுக்கு, நானே ஆணை பிறப்பித்துள்ளேன்: நான் சினமடைந்து பிறப்பித்துள்ள என் கட்டளையை நிறைவேற்றிட, தங்கள் வலிமையால் பெருமிதம் கொள்ளும் என் வீரர்களை அழைத்துள்ளேன். | ஏசா 23:11 ஏசா 44:27 ஏசா 44:28 ஏசா 45:4 ஏசா 45:5 எரே 50:21-46 |
| 4 | மலைகளின் மேல் எழும் பேரிரைச்சலைக் கேளுங்கள்: அது பெருங்கூட்டமாய் வரும் மக்களின் ஆரவராம்: அரசுகளின் ஆர்ப்பாட்டக் குரலைக் கேளுங்கள், பிற இனத்தார் ஒருங்கே திரண்டு விட்டனர்: | ஏசா 22:1-9 எரே 50:2 எரே 50:3 எரே 50:21-46 எரே 51:11 எரே 51:27 எரே 51:28 எசே 38:3-23 யோவே 3:14 சகரி 14:1-3 சகரி 14:13-3 சகரி 14:14-3 வெளிப் 19:11-21 |
| 5 | தொலைநாட்டிலிருந்தும் தொடுவானத்து எல்லைகளிலிருந்தும் அவர்கள் வருகின்றார்கள்: ஆண்டவர் தம் கடும்சினத்தின் போர்க் கலன்களோடு உலகம் முழுவதையும் அழிக்க வருகின்றார். | ஏசா 13:17 எரே 50:3 எரே 50:9 எரே 51:11 எரே 51:27 எரே 51:28 மத் 24:31 |
| 6 | அழுது புலம்புங்கள், ஆண்டவரின் நாள் அண்மையில் உள்ளது: எல்லாம் வல்லவரிடமிருந்து அழிவு வடிவத்தில் அது வருகின்றது: | ஏசா 14:31 ஏசா 23:1 ஏசா 52:5 ஏசா 65:14 எரே 25:34 எரே 49:3 எரே 51:8 எசே 21:12 எசே 30:2 யோவே 1:5 யோவே 1:11 யோவே 1:13 செப் 1:14 யாக் 5:1 வெளிப் 18:10 |
| 7 | ஆதலால், கைகள் யாவும் தளர்ந்து விடும்: மானிட நெஞ்சம் அனைத்தும் உருகி நிற்கும். | ஏசா 10:3 ஏசா 10:4 ஏசா 37:27 ஏசா 51:20 எரே 50:43 எசே 7:17 எசே 21:7 நாகூ 1:6 |
| 8 | அவர்கள் திகிலடைவார்கள்: துன்ப துயரங்கள் அவர்களைக் கவ்விக்கொள்ளும்: பேறுகாலப் பெண்ணைப்போல வேதனையடைவார்கள்: ஒருவர் மற்றவரைப் பார்த்துத் திகைத்து நிற்பர்: கோபத் தீயால் அவர்கள் முகம் கனன்று கொண்டிருக்கும். | ஏசா 21:3 ஏசா 21:4 ஏசா 26:17 சங் 48:5 சங் 48:6 எரே 30:6 எரே 50:43 தானி 5:5 தானி 5:6 1தெச 5:3 |
| 9 | இதோ, ஆண்டவரின் நாள் வருகின்றது, கொடுமையும் கோபமும் கடும் சீற்றமும் நிறைந்த நாள் அது: மண்ணுலகைப் பாழ்நிலமாக்கும் நாள் அது: அதிலிருக்கும் பாவிகளை முற்றிலும் அழித்துவிடும் நாள் அது. | ஏசா 13:15-18 ஏசா 47:10-15 எரே 6:22 எரே 6:23 எரே 50:40-42 எரே 51:35-58 நாகூ 1:2 நாகூ 1:6 மல்கி 4:1 வெளிப் 17:16 வெளிப் 17:17 வெளிப் 18:8 வெளிப் 19:17-21 |
| 10 | வானத்து விண்மீன்களும் இராசிக் கூட்டங்களும் ஒளி வீசமாட்டா: தோன்றும்போதே கதிரவன் இருண்டு போவான்: வெண்ணிலாவும் தண்ணொளியைத் தந்திடாது. | ஏசா 5:30 ஏசா 24:21 ஏசா 24:23 எசே 32:7 எசே 32:8 யோவே 2:10 யோவே 2:31 யோவே 3:15 ஆமோ 8:9 ஆமோ 8:10 செப் 1:15 செப் 1:16 மத் 24:29 மாற் 13:24 லூக் 21:25 வெளிப் 6:12-14 வெளிப் 8:12 |
| 11 | உலகை அதன் தீச்செயலுக்காகவும் தீயோரை அவர்தம் கொடுஞ் செயலுக்காகவும் நான் தண்டிப்பேன்: ஆணவக்காரரின் அகந்தையை அழிப்பேன்: அச்சுறுத்துவோரின் இறுமாப்பை அடக்குவேன். | ஏசா 14:21 ஏசா 24:4-6 எரே 51:34-38 வெளிப் 12:9 வெளிப் 12:10 வெளிப் 18:2 வெளிப் 18:3 |
| 12 | மானிடரைப் பசும் பொன்னைவிடவும் மனிதர்களை ஓபீரின் தங்கத்தைவிடவும் அரிதாக்குவேன். | ஏசா 13:15-18 ஏசா 4:1 ஏசா 24:6 சங் 137:9 |
| 13 | ஆதலால், வானத்தை நடுங்கச் செய்வேன்: மண்ணுலகம் தன் இருப்பிடத்திலிருந்து ஆட்டங் கொடுக்கும்: படைகளின் ஆண்டவரது கோபத்தால் அவரது கடும்சினத்தின் நாளில் இது நடக்கும். | யோவே 3:16 ஆகா 2:6 ஆகா 2:7 ஆகா 2:21 ஆகா 2:22 மத் 24:29 எபிரெ 12:26 எபிரெ 12:27 வெளிப் 6:13 வெளிப் 6:14 |
| 14 | துரத்தப்பட்ட புள்ளிமான் போலவும், ஒன்று சேர்ப்பாரின்றிச் சிதறுண்டு ஆடுகளைப் போலவும், எல்லாரும் தம் மக்களிடம் திரும்பிச் செல்வர்: எல்லாரும் தம் சொந்த நாட்டுக்குத் தப்பியோடுவர். | ஏசா 17:13 1இரா 22:17 1இரா 22:36 |
| 15 | அகப்பட்ட ஒவ்வொருவரும் பிடிபட்ட ஒவ்வொருவரும் வாளால் மடிவர். | ஏசா 14:19-22 ஏசா 47:9-14 எரே 50:27 எரே 50:35-42 எரே 51:3 |
| 16 | அவர்கள் பச்சிளம் குழந்தைகள் அவர்கள் கண்ணெதிரே மோதியடிக்கப்படுவர். அவர்கள் வீடுகள் கொள்ளையிடப்படும், அவர்கள் துணைவியர் மானபங்கப்படுத்தப்படுவர். | சங் 137:8 சங் 137:9 ஓசி 10:14 நாகூ 3:10 |
| 17 | இதோ, அவர்களுக்கு எதிராக நான் மேதியரைக் கிளர்ந்தெழச் செய்கின்றேன், அவர்கள் வெள்ளியைப் பெரிதாக எண்ணாதவர்கள்: பொன்னை அடைவதற்கு ஆவல் கொள்ளாதவர்கள். | ஏசா 13:3-5 ஏசா 21:2 ஏசா 41:25 எரே 50:9 எரே 51:11 எரே 51:27 எரே 51:28 தானி 5:28-31 |
| 18 | அவர்கள் வில்வீரர் இளைஞரை மோதியடிப்பார்கள், பச்சிளங் குழந்தைகளுக்கு அவர்கள் கருணை காட்டமாட்டார்கள்: சிறுவர்களுக்கு அவர்கள் கண்களில் இரக்கம் இராது. | ஏசா 13:16 2இரா 8:12 ஓசி 13:16 நாகூ 2:1 நாகூ 3:10 |
| 19 | அரசுகளில் சிறப்புமிகு கல்தேயரின் மேன்மையும் பெருமையுமான பாபிலோன் கடவுள் அழித்த சோதோம் கொமோராவைப்போல ஆகிவிடும். | ஏசா 14:4-6 ஏசா 14:12-15 எரே 51:41 தானி 2:37 தானி 2:38 தானி 4:30 |
| 20 | இனி எவரும் அதில் ஒருபோதும் குடியிருக்க மாட்டார்: அதுவும் தலைமுறை தலைமுறையாகக் குடியற்று இருக்கும்: அரேபியர் அங்கே கூடாரம் அமைக்கமாட்டார்: ஆயர்கள் தம் மந்தையை அங்கே இளைப்பாற விடுவதில்லை. | ஏசா 14:23 எரே 50:3 எரே 50:13 எரே 50:21 எரே 50:39 எரே 50:45 எரே 51:25 எரே 51:29 எரே 51:43 எரே 51:62-64 வெளிப் 18:21-23 |
| 21 | ஆனால், காட்டு விலங்குகள் அங்கே படுத்துக் கிடக்கும்: ஊளையிடும் குள்ளநரிகள் அவர்கள் வீடுகளை நிரப்பும்: தீக்கோழிகள் அங்கே தங்கியிருக்கும்: வெள்ளாட்டுக் கிடாய்கள் அங்கே துள்ளித் திரியும். | ஏசா 34:11-15 வெளிப் 18:2 |
| 22 | அவர்கள் கோட்டைகளில் ஓநாய்கள் அலறும்: அரண்மனைகளில் குள்ளநரிகள் ஊளையிடும்: அதற்குரிய நேரம் நெருங்கிவிட்டது: அதற்குரிய நாள்கள் அண்மையில் உள்ளன. | ஏசா 35:7 |