1அந்நாளில் நீ இவ்வாறு சொல்வாய்: “ஆண்வடரே, நான் உமக்கு நன்றி சொல்வேன்: நீர் என்மேல் சினமடைந்திருந்தீர்: இப்பொழுதோ, உம் சினம் தணிந்து விட்டது: நீர் எனக்கு ஆறுதலும் அளித்துள்ளீர்.ஏசா 2:11 ஏசா 11:10 ஏசா 11:11 ஏசா 11:16 ஏசா 14:3 ஏசா 26:1 ஏசா 27:1-3 ஏசா 27:12-3 ஏசா 27:13-3 ஏசா 35:10 சகரி 14:9 சகரி 14:20 2இறைவன் என் மீட்பர், அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன், நான் அஞ்சமாட்டேன்: ஆண்டவரே என் ஆற்றல், அவரையே பாடுவேன், என் மீட்பும் அவரே.ஏசா 7:14 ஏசா 9:6 ஏசா 9:7 ஏசா 45:17 ஏசா 45:22-25 சங் 27:1 எரே 3:23 எரே 23:6 யோனா 2:9 மத் 1:21-23 லூக் 2:30-32 ரோம 1:16 1தீமோ 3:16 வெளிப் 7:10 3மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து நீங்கள் அகமகிழ்வோடு தண்ணீர் முகந்து கொள்வீர்கள்.ஏசா 49:10 ஏசா 55:1-3 சங் 36:9 உன்ன 2:3 எரே 2:13 யோவா 1:16 யோவா 4:10-14 யோவா 7:37-39 வெளிப் 7:17 வெளிப் 22:1 வெளிப் 22:17 4அந்நாளில் நீங்கள் சொல்வதாவது: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்: அவர் திருப்பெயரைப் போற்றுங்கள்: மக்களினங்களிடையே அவர்செயல்களை அறிவியுங்கள்: அவர் திருப்பெயர் உயர்க எனப் பறைசாற்றுங்கள்.ஏசா 12:1 சங் 106:47 சங் 106:48 சங் 113:1-3 சங் 117:1 சங் 117:2 5ஆண்டவருக்குப் புகழ்ப்பா அமைத்துப் பாடுங்கள்: ஏனெனில் அவர் மாட்சியுறும் செயல்களைப் புரிந்துள்ளார்: அனைத்துலகும் அதை அறிந்து கொள்வதாக.யாத் 15:1 யாத் 15:21 சங் 68:32-35 சங் 98:1 சங் 105:2 வெளிப் 15:3 வெளிப் 19:1-3 6சீயோனில் குடியிருப்போரே! ஆர்ப்பரிந்து அக்களியுங்கள்: இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார்.ஏசா 40:9 ஏசா 52:7-10 ஏசா 54:1 செப் 3:14 லூக் 19:37-40