32
உலகிலுள்ள அரசர்களே! கடவுளைப் புகழ்ந்தேத்துங்கள்: ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள். (சேலா)
33
வானங்களின்மேல், தொன்மைமிகு வானங்களின்மேல், ஏறிவரும் அவரைப் புகழுங்கள்: இதோ! அவர் தம் குரலில் தம் வலிமைமிகு குரலில் முழங்குகின்றார்.
34
கடவுளுக்கே ஆற்றலை உரித்தாக்குங்கள்: அவரது மாட்சி இஸ்ரயேல் மேலுள்ளது: அவரது வலிமை மேக மண்டலங்களில் உள்ளது.
35
கடவுள் தம் தூயகங்களில் அஞ்சுவதற்கு உரியவராய் விளங்குகின்றார்: இஸ்ரயேலின் கடவுள் தம் மக்களுக்கு வலிமையையும் ஊக்கத்தையும் அளிக்கின்றார்: கடவுள் போற்றி! போற்றி!