எரேமியா 23:33-38 - WCV
33
இந்த மக்களோ ஓர் இறைவாக்கினரோ ஒரு குருவோ உன்னிடம் “ஆண்டவரின் சுமை யாது?” என்று கேட்டால், “நீங்களே, அந்தச் சுமை: நான் உங்களைத் தள்ளவிடுவேன், என்கிறார் ஆண்டவர்” என்று சொல்.
34
“ஆண்டவரின் சுமை” என்று ஓர் இறைவாக்கினர் அல்லது குரு அல்லது மக்களில் யாராவது கூறினால், அந்த மனிதரையும் அவர் வீட்டாரையும் நான் தண்டிப்பேன்.
35
“ஆண்டவர் என்ன பதில் சொன்னார்?” “ஆண்டவர் என்ன பேசினார்?” என்றே நீங்கள் உங்கள் உற்றார் உறவினரிடம் கேட்க வேண்டும்.
36
“ஆண்வரின் சுமை” என்று இனி யாரும் குறிப்பிடக்கூடாது: அவனவன் சொல்லே அவனுக்குச் சுமை. வாழும் கடவுளும் படைகளின் ஆண்டவருமான நம் கடவுளின் சொற்களை நீங்கள் திரித்துக் கூறுகிறீர்கள்.
37
நீங்கள் இறைவாக்கினரிடம், “ஆண்டவர் என்ன பதில் சொன்னார்?”, “ஆண்டவர் என்ன பேசினார்?” என்றே கேட்கவேண்டும்.
38
“ஆண்டவரின் சுமை” என்று நீங்கள் கூறுவீர்களானால், ஆண்டவர் சொல்வதைக் கேளுங்கள். “ஆண்டவரின் சுமை” என்று நீங்கள் கூறக்கூடாது என்று நான் உங்களுக்குச் சொல்லியனுப்பியிருந்தும், நீங்கள் “ஆண்டவரின் சுமை” என்று கூறுகிறீர்கள்.