1“சீனோன் குன்றின்மீது இன்பத்தில் திளைத்திருப்போரே! சமாரியா மலைமேல் கவலையற்றிருப்போரே! மக்களினங்களுள் சிறந்த இனத்தின் உயர்குடி மக்களே! இஸ்ரயேலின் மக்கள் தேடி வருமளவுக்குப் பெருமை வாய்ந்தவர்களே! உங்களுக்கு ஐயோ கேடு!நியா 18:7 ஏசா 32:9-11 ஏசா 33:14 எரே 48:11 எரே 49:31 லூக் 6:24 லூக் 6:25 லூக் 12:17-20 யாக் 5:5 1பேது 5:7 2கல்னேக்குப் போய்ப் பாருங்கள்: அங்கிருந்து சிறந்த நகரமாகிய ஆமாத்துக்குப் போங்கள்: பிறகு பெலிஸ்தியரின் நகரான காத்துக்குச் செல்லுங்கள்: அந்த அரசுகள் உங்கள் அரசுகளை விடச் சிறந்தவையோ? உங்கள் நாடுகள் அவர்களுடைய நாடுகளைவிடப் பரப்பளவில் பெரியவையோ?எரே 2:10 எரே 2:11 நாகூ 3:8 3தீய நாளை இன்னும் தள்ளிவைப்பதாக நீங்கள் நினைக்கின்றீர்கள்: ஆனால் வன்முறையின் ஆட்சியை அருகில் கொண்டு வருகின்றீர்கள்.ஆமோ 5:18 ஆமோ 9:10 பிரச 8:11 ஏசா 47:7 ஏசா 56:12 எசே 12:22 எசே 12:27 மத் 24:48 1தெச 5:3 2பேது 3:4 வெளிப் 18:17 4தந்தத்தாலான கட்டிலில் பஞ்சணைமீது சாய்ந்து கிடப்போருக்கும் கிடையிலிருந்து வரும் ஆட்டுக் குட்டிகளையும் மந்தையிலிருந்து வரும் கொழுத்த கன்றுகளையும் உண்போருக்கும் ஐயோ கேடு!ஏசா 5:11 ஏசா 5:12 ஏசா 22:13 லூக் 16:19 ரோம 13:13 ரோம 13:14 யாக் 5:5 5அவர்கள் வீணையொலி எழுப்பி அலறித் தீர்க்கின்றார்கள், தாவீதைப்போல புதிய இசைக்கருவிகளைக் கண்டுபிடிக்கின்றார்கள்.ஆதி 31:27 யோபு 21:11 யோபு 21:12 பிரச 2:8 ஏசா 5:12 1பேது 4:3 வெளிப் 18:22 6கோப்பைகளில் திராட்சை இரசம் குடிக்கின்றார்கள்: உயர்ந்த நறுமண எண்ணெயைத் தடவிக்கொள்கின்றார்கள்.ஓசி 3:1 1தீமோ 5:23 7ஆகையால் அவர்கள்தான் முதலில் நாடு கடத்தப்படுவார்கள்: அவர்களது இன்பக் களிப்பும் இல்லாதொழியும்.ஆமோ 5:5 ஆமோ 5:27 ஆமோ 7:11 உபா 28:41 லூக் 21:24 8தலைவராகிய ஆண்டவர் தம்மீது ஆணையிட்டுக் கூறுகிறார்: படைகளின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு சொல்கிறார்: யாக்கோபின் செருக்கை நான் வெறுக்கிறேன்: அவனுடைய கோட்டைகளை அருவருக்கிறேன். நகரையும் அதிலுள்ள யாவரையும் நான் கைவிட்டு விடுவேன்.ஆமோ 4:2 எரே 51:14 எபிரெ 6:13-17 9ஒரு வீட்டில் பத்துப்பேரே இருந்தாலும் அவர்களும் மாண்டு போவார்கள்.ஆமோ 5:3 1சாமு 2:33 எஸ்தர் 5:11 எஸ்தர் 9:10 யோபு 1:2 யோபு 1:19 யோபு 20:28 சங் 109:13 ஏசா 14:21 10வீட்டிலிருந்து எலும்புகளை எடுத்துச் செல்ல மிகச் சிலரே தப்பிப் பிழைப்பார்கள்: ஒருவன், வீட்டில் மூலையிலிருக்கும் இன்னொருவனிடம், “உன்னுடன் வேறு யாரேனும உளரோ?” என்று கேட்க, அவன், “இல்லை” என்று பதில் சொல்லி “பேசாதே, ஆண்டவரின் பெயரைச் சொல்லக் கூடாது” என்பான்.ஆமோ 8:3 1சாமு 31:12 2இரா 23:16 எரே 16:6 11ஆண்டவர்தாமே ஆணையிடுகின்றார்: பெரிய மாளிகைகளைத் தரைமட்டமாக்குவார்: சிறிய வீடுகளைத் தவிடுபொடியாக்குவார்.ஆமோ 3:6 ஆமோ 3:7 ஆமோ 9:1 ஆமோ 9:9 சங் 105:16 சங் 105:31 சங் 105:34 ஏசா 10:5 ஏசா 10:6 ஏசா 13:3 ஏசா 46:10 ஏசா 46:11 ஏசா 55:11 எசே 29:18-20 நாகூ 1:14 12பாறைகள்மேல் குதிரைகள் ஓடுமோ? எருதுகளைக் கட்டிக் கடலை உழுவதுண்டோ? நீங்கள் நீதியை நஞ்சாக மாற்றினீர்கள், நேர்மையின் கனியை எட்டிக்காயாய் ஆக்கினீர்கள்.ஏசா 48:4 எரே 5:3 எரே 6:29 எரே 6:30 சகரி 7:11 சகரி 7:12 13லோதபார் ஊரைப் பிடித்தது குறித்துப் பூரிப்பு அடைகிறீர்கள்: “நம் சொந்த வலிமையால் கர்னாயிமைப் பிடித்து நமதாக்கிக் கொள்ளவில்லையா?” என்கிறீர்கள்.யாத் 32:18 யாத் 32:19 நியா 9:19 நியா 9:20 நியா 9:27 நியா 16:23-25 1சாமு 4:5 யோபு 31:25 யோபு 31:29 பிரச 11:9 ஏசா 8:6 எரே 9:23 எரே 50:11 யோனா 4:6 ஆபகூ 1:15 ஆபகூ 1:16 செப் 3:11 லூக் 12:19 லூக் 12:20 யோவா 16:20 யாக் 4:16 வெளிப் 11:10 14இஸ்ரயேல் வீட்டாரே! உங்களுக்கு எதிராக வேற்றினம் ஒன்றைத் தூண்டிவிடுவேன். அவர்கள் ஆமாத்து வாயிலில் இருந்து அராபா நீரோடை வரையில் உங்களை ஒடுக்கித் துன்புறுத்துவார்கள்”, என்கிறார் படைகளின் கடவுளாகிய ஆண்டவர்.2இரா 15:29 2இரா 17:6 ஏசா 7:20 ஏசா 8:4-8 ஏசா 10:5 ஏசா 10:6 எரே 5:15-17 ஓசி 10:5