நியாயாதிபதிகள் 16:23-25 - WCV
23
பெலிஸ்தியச் சிற்றரசர்,”நம் கடவுள் நம் எதிரி சிம்சோனை நம் கையில் ஒப்புவித்தார்” என்று சொல்லித் தம் தெய்வமான தாகோனுக்கு மாபெரும் பலி செலுத்தி விழா எடுக்க ஒன்று கூடினர்.
24
மக்கள் அவரைப் பார்த்ததும் தங்கள் தெய்வத்தைப் புகழ்ந்தனர். “நம் கடவுள் நம் எதிரி சிம்சோனை நம் கையில் ஒப்புவித்தார்.அவன் நம் விளைநிலங்களை அழித்தவன்: நம்மில் பலரைக் கொன்றவன்: என்றனர்.
25
அவர்கள் அகமகிழ்ந்திருக்க,”சிம்சோனைக் கூப்பிடுங்கள்.அவன் நமக்கு வேடிக்கை காட்டட்டும்” என்றனர்.சிறையிலிருந்து சிம்சோனைக் கொண்டுவர, அவர் அவர்கள் முன்னிலையில் வேடிக்கை காட்டினார்.அவர்கள் அவரைத் தூண்களுக்கு இடையே நிற்கும்படி செய்தனர்.