| 1 | பெல்சாட்சர் என்ற அரசன் உயர்குடி மக்கள் ஆயிரம் பேருக்குப் பெரியதொரு விருந்து வைத்தான்: அந்த ஆயிரம் பேருடன் அவனும் திராட்சை மது குடித்தான். | ஆதி 40:20 எஸ்தர் 1:3 ஏசா 21:4 ஏசா 21:5 ஏசா 22:12 ஏசா 22:14 எரே 51:39 எரே 51:57 நாகூ 1:10 மாற் 6:21 மாற் 6:22 |
| 2 | அவ்வாறு குடித்துக்கொண்டிருந்தபொழுது, அரசன் தானும் தன் மனைவியரும் வைப்பாட்டிகளும் குடிப்பதற்கென்று, தன் தந்தையாகிய நெபுகத்னேசர் எருசலேம் திருக்கோவிலிருந்து கொண்டு வந்திருந்த பொன், வெள்ளிக் கிண்ணங்களைக் கொண்டுவரச் சொன்னான். | தானி 1:2 2இரா 24:13 2இரா 25:15 2நாளா 36:10 2நாளா 36:18 எஸ்றா 1:7-11 எரே 27:16-22 எரே 52:19 |
| 3 | அதன்படி, எருசலேமிலிருந்த கடவுளின் கோவிலிருந்து கொண்டுவந்த பொன் கிண்ணங்களை எடுத்து வந்தார்கள்: அரசனும் அவனுடைய உயர்குடி மக்களும், அவனுடைய உயர்குடி மக்களும், அவனுடைய மனைவியரும், வைப்பாட்டியரும் அந்தக் கிண்ணங்களிலிருந்து குடித்தார்கள். |
| 4 | அவர்கள் திராட்சை மது குடித்துக்கொண்டே பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, மரம், கல் ஆகியவற்றாலான தங்கள் தெய்வங்களைப் புகழ்ந்தார்கள். | தானி 5:23 தானி 4:37 நியா 16:23 நியா 16:24 ஏசா 42:8 ஓசி 2:8-13 வெளிப் 9:20 வெளிப் 9:21 |
| 5 | திடீரென்று ஒரு மனிதனுடைய கைவிரல்கள் தோன்றி அரசனது அரண்மனை உட்சுவரில் விளக்குத் தூணுக்கு எதிரே எழுதத் தொடங்கின. அவ்வாறு எழுதும்போது அரசன் அந்த உள்ளங்கையைப் பார்த்தான். | தானி 4:31 தானி 4:33 யோபு 20:5 சங் 78:30 சங் 78:31 நீதி 29:1 லூக் 12:19 லூக் 12:20 1தெச 5:2 1தெச 5:3 |
| 6 | அதைக் கண்டு அரசன் முகம் கறுத்து, நெஞ்சம் கலங்கி, குலைநடுங்கி, தொடை நடுக்கமுற்றான். | தானி 5:9 தானி 2:1 தானி 3:19 யோபு 15:20-27 யோபு 20:19-27 சங் 73:18-20 ஏசா 21:2-4 |
| 7 | உடனே அரசன் மாயவித்தைக் காரரையும் கல்தேயரரையும் சோதிடரையும் கூட்டிவரும்வடி உரக்கக் கத்தினான். அரசன் பாபிலோனிய ஞானிகளை நோக்கி, “இந்தச் சொற்களைப் படித்து, இவற்றின் உட்பொருளை எனக்கு வெளிப்படுத்துகிறவன் எவனோ அவனுக்கு அரச உடை அணிவித்து என் அரசின் மூன்றாம் நிலையில் அமர்த்துவேன்” என்றான். | தானி 4:14 |
| 8 | பிறகு அரசனின் ஞானிகள் எல்லாரும் உள்ளே சென்றனர்: ஆனால் அந்த சொற்களைப் படிக்கவோ அவற்றின் உட்பொருளை அரசனுக்கு விளக்கவோ அவர்களால் இயலவில்லை. | தானி 2:27 தானி 4:7 ஆதி 41:8 ஏசா 47:9 ஏசா 47:12-15 |
| 9 | அதைக் கண்ட பெல்சாட்சர் அரசன் மிகவும் மனக்கலக்க முற்றான்: அவனது முகம் வெளிறியது. அவனுடைய உயர்குடி மக்களும் திகைத்து நின்றனர். | தானி 5:6 தானி 2:1 யோபு 18:11-14 சங் 18:14 வெளிப் 6:15 |
| 10 | அரசனும் உயர்குடி மக்களும் எழுப்பிய கூச்சலைக் கேட்டு, அரசி விருந்துக்கூடத்திற்குள் விரைந்து வந்து, “அரசரே! நீர் நீடூழி வாழ்க! நீர் வீணாக அச்சமுற்று, முகம் வெளிறவேண்டாம். | தானி 2:4 தானி 3:9 தானி 6:6 தானி 6:21 1இரா 1:31 |
| 11 | புனிதமிகு கடவுள் ஆவி நிறைந்த மனிதன் ஒருவன் உமது அரசில் இருக்கிறான். உம் தந்தையின் ஆட்சிக் காலத்தில் அறிவொளியும் நுண்ணறிவும் தெய்வங்களுக்கொத்த ஞானமும் அவனிடம் திகழ்ந்தது தெரிய வந்தது. எனவே உம் தந்தையாகிய நெபுகத்னேசர் அரசர் அவனை மந்திரவாதிகளுக்கும் மாயவித்தைக்காரருக்கும் கல்தேயருக்கும் சோதிடருக்கும் தலைவனாக்கினார். | தானி 2:47 தானி 4:8 தானி 4:9 தானி 4:18 ஆதி 41:11-15 |
| 12 | அந்தத் தானியேல் வியத்தகு விவேகமும் அறிவும் உடையவன்: கனவுகளுக்கு விளக்கம் கூறும் அறிவாற்றல் படைத்தவன்: விடுகதைகளுக்கு விடைகூறும் ஆற்றல் உடையவன்: சிக்கல்களைத் தீர்க்கும் திறமை வாய்ந்தவன்: அவனுக்கு அரசர் “பெல்தெசாச்சார்” என்று பெயரிட்டுள்ளார். அவன் உடனே இங்கு அழைக்கப்படட்டும்: அவன் விளக்கம் கூறுவான்” என்றாள். | தானி 5:14 தானி 6:3 சங் 16:3 நீதி 12:26 நீதி 17:27 கொலோ 1:29 |
| 13 | அவ்வாறே அரசன் முன்னிலைக்குத் தானியேல் அழைத்து வரப்பட்டார். அரசன் அவரைப் பார்த்து, “என் தந்தையாகிய அரசன் யூதாவிலிருந்து சிறைப்பிடித்துவந்தவர்களுள் ஒருவனாகிய தானியேல் என்பவன் நீதானே? | தானி 5:11 தானி 1:21 தானி 2:48 தானி 8:1 தானி 8:27 |
| 14 | உன்னிடத்தில் புனிதமிகு கடவுளின் ஆவியும் அறிவொளியும் நுண்ணறிவும் சிறந்த ஞானமும் உண்டென உன்னைப் பற்றிக் கேள்விப் பட்டுள்ளேன். | தானி 5:11 தானி 5:12 |
| 15 | இப்பொழுது இந்தச் சொற்களைப் படித்து இவற்றின் உட்பொருளை எனக்கு விளக்கிக் கூறுமாறு, இந்த ஞானிகளும் மாயவித்தைக்காரரும் என்முன் அழைத்து வரப்பட்டனர். ஆனால், அவர்களால் இந்தச் சொற்களின் உட்பொருளை விளக்கிக்கூற முடியவில்லை. | தானி 5:7 தானி 5:8 தானி 2:3-11 ஏசா 29:10-12 ஏசா 47:12 |
| 16 | விளக்கங்கள் கூறவும் சிக்கல்களைத் தீர்க்கவும் உன்னால் முடியும் எனக் கேள்விப்படுகிறேன். இப்பொழுது நீ இந்தச் சொற்களைப் படித்து இவற்றின் உட்பொருளை விளக்கினால், உனக்கு அரச உடை உடுத்தி, கழுத்தில் பொன்மாலை அணிவித்து, என் அரசில் மூன்றாம் நிலையில் உன்னை அமர்த்துவேன்” என்றான். | ஆதி 40:8 |
| 17 | அப்பொழுது அரசனுக்குத் தானியேல் மறுமொழியாகக் கூறியது: “உம்முடைய அன்பளிப்புகள் உம்மிடமே இருக்கட்டும்: உம் பரிசுகளை வேறு யாருக்காவது கொடும். ஆயினும், இந்தச் சொற்களை அரசருக்குப் படித்துக் காட்டி அவற்றின் உட்பொருளை விளக்கிக் கூறுவேன். | தானி 5:29 ஆதி 14:23 2இரா 3:13 2இரா 5:16 2இரா 5:26 அப் 8:20 |
| 18 | அரசரே! உன்னதரான கடவுள் உம் தந்தையாகிய நெபுகத்னேசருக்குப் பேரரசையும் சிறப்பையும் மேன்மையையும் மாண்பையும் அளித்தார். | தானி 3:17 தானி 3:18 தானி 4:22 தானி 6:22 அப் 26:13 அப் 26:19 |
| 19 | அவருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பின் காரணமாய் எல்லா இனத்தாரும் நாட்டினரும் மொழியினரும் அவருக்கு அஞ்சி நடுங்கினர். அவர் தம் விருப்பப்படி யாரையும் வாழவிடுவார்: தம் விருப்பப்படியே யாரையும் உயர்த்துவார்: தம் விருப்பப்படியே யாரையும் தாழ்த்துவார். | தானி 3:4 தானி 4:22 எரே 25:9-14 எரே 27:5-7 ஆபகூ 2:5 ரோம 13:1 |
| 20 | ஆனால் அவருடைய உள்ளம் இறுமாப்புற்று, அவருடைய மனம் செருக்கினால் கடினப்பட்டது. உடனே அவர் அரசின் அரியணையிலிருந்து தள்ளப்பட்டார்: அவரிடமிருந்து அரசது மேன்மை பறிக்கப்பட்டது. | தானி 4:30-33 தானி 4:37-33 யாத் 9:17 யாத் 18:11 யோபு 15:25-27 யோபு 40:11 யோபு 40:12 நீதி 16:5 நீதி 16:18 ஏசா 14:12-17 லூக் 1:51 லூக் 1:52 லூக் 18:14 |
| 21 | மனித சமுதாயத்தினின்று அவர் விரட்டப்பட்டார். மேலும் அவரது உள்ளம் விலங்குகளின் மனமாக மாற்றப்படவே, அவர் காட்டுக் கழுதைகளோடு வாழ்ந்துவந்தார். மனிதர்களின் அரசுகளை உன்னதரே ஆள்கின்றார் என்றும், தாம் விரும்பியவர்க்கே அவற்றை வழங்குகின்றார் என்றும் உணரும்வரை, அவர் மாடுபோல் புல்லை மேய்ந்தார்: அவரது உடல் வானத்துப் பனியில் நனைந்து கிடந்தது. | தானி 4:25 தானி 4:32 தானி 4:33 யோபு 30:3-7 |
| 22 | அவருடைய மகனாகிய பெல்சாட்சர்! இவற்றை எல்லாம் நீர் அறிந்திருந்தும் உன் இதயத்தைத் தாழ்த்திக் கொள்ளவில்லை. | தானி 5:18 சங் 119:46 மத் 14:4 அப் 4:8-13 |
| 23 | ஆனால் விண்ணுலக ஆண்டவருக்கு எதிராக உம்மையே உயர்த்தினீர்: அவரது கோவிலின் கிண்ணங்களைக் கொண்டு வரச் செய்து, நீரும் உம் உயர்குடி மக்களும், உம்முடைய மனைவியரும் வைப்பாட்டியரும் அவற்றிலிருந்து திராட்சை மது குடித்தீர்கள்: மேலும் காணவோ, கேட்கவோ, எதையும் உணரவோ இயலாத வெள்ளி, பொன், வெண்கலம், இரும்பு, மரம், கல் ஆகியவற்றாலான தெய்வங்களைப் புகழ்ந்தீர்கள். ஆனால் உமது உயிரையும் உம் வழிகளையும் தம் கைக்குள் வைத்திருக்கும் கடவுளை நீர் பெருமைப்படுத்தவில்லை. | தானி 5:3 தானி 5:4 2இரா 14:10 ஏசா 2:12 ஏசா 33:10 ஏசா 37:23 எரே 50:29 எசே 28:2 எசே 28:5 எசே 28:17 எசே 31:10 ஆபகூ 2:4 1தீமோ 3:6 வெளிப் 13:5 வெளிப் 13:6 |
| 24 | ஆகையால் அவர் இந்தக் கையைத் தம் திருமுன்னிருந்து அனுப்பி, இந்த எழுத்துகளைப் பொறிக்கச் செய்தார். |
| 25 | பொறிக்கப்பட்ட சொற்களாவன: “மேனே மேனே, தேகேல், பார்சின்” |
| 26 | இவற்றின் உட்பொருள்: மேனே: கடவுள் உமது அரசின் நாள்களை எண்ணி வரையறுத்து அதனை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டார். | தானி 9:2 யோபு 14:14 ஏசா 13:1-14 ஏசா 21:1-10 ஏசா 47:1-15 எரே 25:11 எரே 25:12 எரே 27:7 எரே 50:1-51 அப் 15:18 |
| 27 | தேகேல்: நீர் தராசில் நிறுக்கப்பட்டீர்: எடையில் மிகவும் குறைந்துள்ளீர். | யோபு 31:6 சங் 62:9 எரே 6:30 எசே 22:18-20 |
| 28 | பார்சின்: உமது அரசு பிரிக்கப்பட்டு மேதியருக்கும் பாரசீகருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது”. | தானி 5:31 தானி 6:28 தானி 8:3 தானி 8:4 தானி 8:20 தானி 9:1 ஏசா 13:17 ஏசா 21:2 ஏசா 45:1 ஏசா 45:2 |
| 29 | உடனே, பெல்சாட்சரின் ஆணைப்படி, தானியேலுக்கு அரச உடை உடுத்தி, கழுத்தில் பொன்மாலை அணிவித்தனர். மேலும், அரசில் மூன்றாம் நிலையில் தானியேல் அமர்த்தப்படுவார் என்றும் முரசறைந்தனர். | தானி 5:7 தானி 5:16 |
| 30 | அன்றிரவே கல்தேய அரசனாகிய பொல்சாட்சர் கொலை செய்யப்பட்டான். | தானி 5:1 தானி 5:2 ஏசா 21:4-9 ஏசா 47:9 எரே 51:11 எரே 51:31 எரே 51:39 எரே 51:57 |
| 31 | 31 | தானி 6:1 தானி 9:1 |