சங்கீதம் 73:18-20 - WCV
18
உண்மையில் அவர்களை நீர் சறுக்கலான இடங்களில் வைப்பீர்: அவர்களை விழத்தட்டி அழிவுக்கு உள்ளாக்குவீர்.
19
அவர்கள் எவ்வளவு விரைவில் ஒழிந்து போகிறார்கள்! அவர்கள் திகில் பிடித்தவர்களாய் அடியோடு அழிந்து போகிறார்கள்!
20
விழித்தெழுவோரின் கனவுபோல் அவர்கள் ஒழிந்து போவார்கள்: என் தலைவராகிய ஆண்டவரே, நீர் கிளர்ந்தெழும்போது அவர்கள் போலித்தனத்தை இகழ்வீர்.