புனிதமிகு கடவுள் ஆவி நிறைந்த மனிதன் ஒருவன் உமது அரசில் இருக்கிறான். உம் தந்தையின் ஆட்சிக் காலத்தில் அறிவொளியும் நுண்ணறிவும் தெய்வங்களுக்கொத்த ஞானமும் அவனிடம் திகழ்ந்தது தெரிய வந்தது. எனவே உம் தந்தையாகிய நெபுகத்னேசர் அரசர் அவனை மந்திரவாதிகளுக்கும் மாயவித்தைக்காரருக்கும் கல்தேயருக்கும் சோதிடருக்கும் தலைவனாக்கினார்.