1
கடலையடுத்த பாலைநிலம் குறித்த திருவாக்கு: தென்னாட்டிலிருந்து சுழல்காற்றுகள் வீசுவதுபோல், அச்சம்தரும் நாடான பாலைநிலத்திலிருந்து அழிவு வருகின்றது.
2
கொடியதொரு காட்சி எனக்குக் காண்பிக்கப்பட்டது: நம்பிக்கைத் துரோகி துரோகம் செய்கின்றான்: நாசக்காரன் நாசம் செய்கின்றான். “ஏலாம் நாடே! கிளர்ந்தெழு: மேதியாவே! முற்றுகையிடு” அதன் பெருமூச்சுகள் அனைத்துக்கும் முடிவு வரச் செய்வேன்.
3
ஆதலால், என் அடிவயிறு வேதனையால் துடிக்கிறது. பெண்ணின் பேறுகால வேதனைக்கு ஒத்த வேதனைகள் என்னைக் கவ்விக் கொண்டன: கலக்கமடைந்து செவிடன் போல் ஆனேன்: திகைப்புற்றுக் குருடன் போல் ஆனேன்.
4
என் மனம் பேதலிக்கிறது: திகில் என்னை ஆட்கொண்டது: நான் நாடிய கருக்கல் வேளை என்னை நடுக்கமுறச் செய்கிறது.
5
பந்தி தயார் செய்கிறார்கள்: கம்பளத்தை விரிக்கிறார்கள்: உண்கிறார்கள், குடிக்கிறார்கள்: தலைவர்களே, எழுங்கள்: கேடயத்திற்கு எண்ணெய் பூசுங்கள்.
6
ஏனெனில் என் தலைவர் எனக்குக் கூறியது இதுவே: “நீ போய்க் காவலன் ஒருவனை நிறுத்திவை: தான் காண்பதை அவன் அறிவிக்கட்டும்.
7
இருவர் இருவராய்க் குதிரைப்படை வீரர்கள் அணிவகுத்து வருவதையும், கழுதைகள் மேலும் ஒட்டகங்கள் மேலும் வீரர்கள் ஏறி வருவதையும் அவன் காணும்போது மிகவும் கவனமாய்க் கண்காணிக்கட்டும்.”
8
அப்போது காவல்காரன் கூக்குரலிட்டான்: “என் தலைவரே, பகல்முழுவதும் நான் காவல் மாடத்தின்மேல் நின்று கொண்டிருக்கின்றேன்: இரவெல்லாம் என் பணியில் நிறுத்தப்பட்டுள்ளேன்.
9
இதோ, ஒரு சோடிக் குதிரைகள் பூட்டப்பட்ட தேரில், ஏறி ஒருவர் வருகின்றார். அவர் பதிலுரையாக, 'பாபிலோன் வீழ்ந்தது, வீழ்ச்சியடைந்து விட்டது: அதன் தெய்வங்களின் சிலைகள் அனைத்தையும் தரையில் மோதி உடைக்கப்பட்டாயிற்று' என்று கூறுகிறார்.”
10
போராடிக்கப்பட்டுக் களத்தில் சிதறிக் கிடக்கும் என் மக்களே, இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவரிடமிருந்து கேட்டவற்றை நான் உங்களுக்கு அறிவித்துள்ளேன்.