ஓசியா 2:8-13 - WCV
8
கோதுமையும் திராட்சை இரசமும் எண்ணெயும் அவளுக்குக் கொடுத்தது நானே என்பதை அவள் அறியவில்லை. நான் வாரி வழங்கிய பொன், வெள்ளியைக் கொண்டே பாகாலுக்குச் சிலை செய்தார்கள்.
9
ஆதலால், நான் எனது கோதுமையை அதன் காலத்திலும், எனது திராட்சை இரசத்தை அதன் பருவத்திலும் திரும்ப எடுத்துக்கொள்வேன்: அவள் திறந்த மேனியை மறைக்க நான் கொடுத்திருந்த கம்பளி ஆடையையும் சணலாடையையும் பறித்துக் கொள்வேன்.
10
இப்பொழுதே அவளுடைய காதலர் கண்முன் அவளது வெட்கக் கேட்டை வெளிப்படுத்துவேன்: என்னுடைய கையிலிருந்து அவளை விடுவிப்பவன் எவனுமில்லை.
11
அவளது எல்லாக் கொண்டாட்டத்தையும் விழாக்களையும் அமாவாசைகளையும் ஓய்வு நாளையும் அவளுடைய திருநாள்கள் அனைத்தையுமே ஒழித்துவிடுவேன்.
12
“இவை என் காதலர் எனக்குக் கூலியாகக் கொடுத்தவை” என்று அவள் சொல்லிக் கொண்ட அவளுடைய திராட்சைத் தோட்டங்களையும், அத்தி மரங்களையும் பாழாக்குவேன்: அவற்றைக் காடாக்கிவிடுவேன்: காட்டு விலங்குகளுக்கு அவை இரையாகும்.
13
பாகால்களின் விழாக்களைக் கொண்டாடிய நாள்களில் அவள் அவற்றுக்கு நறுமணப்புகை எழுப்பினாள்: வளையல்களாலும் நகைகளாலும் தன்னை அணி செய்து, தன் காதலர்பின் போய் என்னை மறந்தாள்: இவற்றுக்காக அவளை நான் தண்டிப்பேன்” என்கிறார் ஆண்டவர்.